வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஷங்கர் படத்தில் நடிக்க முடியாமல் போன திரிஷா.. பல வருடமாக போராட்டம்

தமிழ் சினிமாவில் தன்னுடைய அழகு மங்காமல் பார்த்துக்கொண்ட ஒருசில நடிகைகளில் திரிஷாவும் ஒருவர். இப்போது வரைக்கும் திரிஷா, விதவிதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து ‘அடுத்த ஸ்ரீதேவி’ என்று சொல்லும் அளவுக்கு சினிமாவின் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார்.

இவர் தமிழில் சாமி, கில்லி போன்ற படங்களின் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்து தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். இந்நிலையில் இன்று ரிலீஸ் ஆகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் திரிஷாவை ஒரு வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தில் முதல் முதலாக ரசிகர்கள் பார்ப்பதற்காக ஆர்வத்துடன் திரையரங்கில் குவிகின்றனர்.

Also Read: ஏலத்திற்கு தயாராகும் குந்தவை, நந்தினியின் நகைகள்.. போட்டி போடும் நிறுவனங்கள்

திரிஷா, பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் படத்தில் நடிக்க முடியாமல் போன செய்தியை தற்போது,  ஷங்கர் டீமில் இருந்த நபர் ஒருவர் பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். 2003 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் சித்தார்த், பரத், ஜெனிலியா உள்ளிட்டோர் நடிப்பில் ஏஆர் ரகுமான் இசையில் சூப்பர் ஹிட் அடித்த படம் பாய்ஸ்.

இந்தப்படத்தில் ஜெனிலியாவுக்கு பதிலாக முதலில் திரிஷா தான் நடிக்க இருந்ததாம். ஷங்கரின் அசிஸ்டெண்ட் டைரக்டர் திரிஷாவின் புகைப்படத்தை ஷங்கரிடம் காட்டியபோது ‘இவங்க இந்த கேரக்டருக்கு செட் ஆக மாட்டாங்க’ என்று ஷங்கர் அப்பவே கணித்து சொல்லிவிட்டாராம்.

Also Read: குந்தவை கொடுக்கும் ஓவர் அலப்பறை.. பொன்னியின் செல்வன் படத்தால் சம்பளத்தை உயர்த்திய திரிஷா

கடந்த சில வருடங்களாக திரிஷாவின் படங்கள் அனைத்தும் ஓடிடி தளத்தில் தான் ரிலீஸ் ஆனதால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று திரையிடப்பட்டு இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தின் தேவதையாக இருக்கும் பேரழகி திரிஷாவை அவருடைய ரசிகர்கள் கட்டவுட் அடித்தும் பாலபிஷேகம் செய்தும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு திரிஷாவின் மார்க்கெட் வேற லெவலுக்கு சென்றிருக்கிறது. இதன்பிறகு திரிஷா தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு 2 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். இருப்பினும் இவருக்கு படவாய்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கிறது.

Also Read: பொன்னியின் செல்வன் கதையில் அரளவிட்ட 5 பெண் கேரக்டர்கள்.. இரு வேடங்களில் கலக்கிய ஐஸ்வர்யா ராய்

Trending News