வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

திரிஷாவின் காதலன் தயாரிப்பில் சமுத்திரகனியின் மாஸ் கூட்டணி.. இயக்குனராக நிரூபிக்காமல் விடமாட்டேன்!

Actress Trisha: திரிஷா ஒரு காலகட்டத்தில் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நிலையில் சில காதல் சர்ச்சைகளில் சிக்கி தனது மார்க்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து அக்கட தேசத்து மொழி படங்கள் கவனம் செலுத்தி வந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்து இருந்தார்.

குந்தவை கதாபாத்திரம் தான் அவருக்கு சரியான திருப்புமுனையை ஏற்படுத்தியதுடன் அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் பட வாய்ப்பு திரிஷாவை தேடி வந்தது. அதன்படி லோகேஷ் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்துள்ள லியோ படத்தில் திரிஷா நடித்திருக்கிறார். இப்படம் அக்டோபர் மாதம் ஆயுத பூஜையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.

Also Read : விடாமுயற்சிக்காக திரிஷா இடத்தை தட்டி பிடித்த ஐட்டம் நடிகை.. யாருதான் அஜித்துக்கு ஜோடி

இந்த சூழலில் திரிஷாவின் எக்ஸ் காதலர் தயாரிப்பு அவதாரம் எடுக்கிறார். அதாவது திரிஷா பாகுபலி நடிகர் ராணாவுடன் நெருங்கி பழகி வந்தார். ஒரு சில காரணங்களினால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட பிரிந்து விட்டனர். இப்போது ராணா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

அவரது தாத்தா மற்றும் அப்பா ஆகியோர் தயாரிப்பாளராக சாதித்த நிலையில் அந்த வரிசையில் இப்போது ராணாவும் இணைந்து இருக்கிறார். அதுவும் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மானை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறாராம். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு பிறகு துல்கர் எப்போது தமிழில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

Also Read : குந்தவையிடம் காதல் மயக்கத்தில் இருந்த 5 ஹீரோக்கள்.. மொத்தமாய் அல்வா கொடுத்து ஓடிய ராணா

அந்த வகையில் துல்கர் சல்மான் ராணா தயாரிப்பில் உருவாகும் படம் தமிழில் தான் உருவாக இருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் சசிகுமாரின் நண்பர் சமுத்திரகனி தான். ஏற்கனவே பல ஹிட் படங்களை கொடுத்த இவர் சமீப காலமாக நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்போது மீண்டும் இயக்கத்தில் இறங்க இருக்கிறார்.

மேலும் சமுத்திரகனியின் சாயலில் எப்போதுமே கருத்து சொல்வது போல இந்த படமும் அதே ஜானரில்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. ஆகையால் துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு இது செம சர்ப்ரைஸ் ஆக இருக்கப் போகிறது.

Also Read : அயோத்தி ஹிட்டால் பல கோடி மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய சசிகுமார்.. அசத்தலாக வெளிவந்த புகைப்படம்

Trending News