Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தலைவன் தலைவிக்கு ஏற்பட்ட சிக்கல்.. விஜய் சேதுபதியால் தடுமாறும் பிசினஸ்

தலைவன் தலைவிக்கு ஏற்பட்ட சிக்கல்.. விஜய் சேதுபதியால் தடுமாறும் பிசினஸ்

Vijay Sethupathi : விஜய் சேதுபதி நடிப்பில் தலைவன் தலைவி படம் உருவாகி இருக்கிறது. பசங்க, எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களை இயக்கிய பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் […]

Vijay Sethupathi : விஜய் சேதுபதி நடிப்பில் தலைவன் தலைவி படம் உருவாகி இருக்கிறது. பசங்க, எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களை இயக்கிய பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து உள்ளது. இந்த படத்தில் இடம் பெற்ற பொட்டால முட்டாயே பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தலைவன் தலைவி படத்திற்கு விநியோகஸ்தர்கள் டிமான்ட் செய்து வருகிறார்கள்.

ஏனென்றால் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தமிழ்நாட்டு ஷேர் மட்டுமே கிட்டதட்ட 20 கோடியை தாண்டியது. இதனால் பெரும் பங்கு விநியோகஸ்தர்களுக்கு கிடைத்தது.

விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்

அதன் பிறகு சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூல் பெரிய அளவில் கிடைக்கவில்லை. இதனால் தமிழ்நாட்டில் ஷேர் 2 கோடி மட்டும் தான் பெற்றது. இதனால் விநியோகஸ்தர்கள் அதிக விலை கொடுத்து இந்த படத்தை வாங்க தயங்குகிறார்கள்.

ஏனென்றால் விஜய் சேதுபதியின் முந்தைய படங்கள் எதுவுமே சரியாக போகவில்லை. மகாராஜா படம் அதிர்ஷ்டவசமாக பெரிய லாபத்தை கொடுத்தது. இந்த படம் எப்படி இருக்கும் என்ற சந்தேகம் அவர்களுக்கு இருப்பதால் குறைந்த விலைக்கு கேட்கின்றனர்.

ஆனால் பாண்டிராஜ், விஜய் சேதுபதி முதல் முறையாக இணைவதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அதோடு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு, சந்தோஷ நாராயணன் இசை என எல்லாமே எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. ஆகையால் படம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.