வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

டி.ஆர்.பி-யில் சன் டிவியை தூக்கி சாப்பிட்ட விஜய் டிவி சீரியல்.. முதல் 5 இடத்தில் 2 இடத்தைப் பிடித்த விஜய் டிவி

சன் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. அவ்வாறு சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் டிஆர்பி ரேட்டிங் கொடுக்கப்படுகிறது. எப்போதும் டி ஆர் பி யில் முதலிடம் பிடிப்பது விஜய் டிவிதான். ஆனால் இந்த முறை சன் டிவி பிடித்துள்ளது. சின்னத்திரையில் ரசிகர்களை கவர்ந்த பிரபலங்களை பட்டியலிட்டு சில நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

சுந்தரி : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் சுந்தரி. இத்தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் கேப்ரில்லா. இத்தொடர் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அப்போது டிஆர்பிஇல் முதலிடத்தை சுந்தரி தொடரில் நடிப்பதற்காக இவருக்கு கிடைத்துள்ளது. அவருடைய இயல்பான மற்றும் வெள்ளந்தியான நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது.

பாக்கியலட்சுமி : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் கதாநாயகி பாக்யாவுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் இல்லத்தரசிகள் படும் கஷ்டத்தை அப்படியே இத்தொடர் பிரதிபலிக்கிறது. நம் வீட்டில் இருக்கும் இயல்பான அம்மாவை போலவே அப்படியே பாக்யாவின் கதாபாத்திரம் இருக்கும்.

பாரதி கண்ணம்மா : விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வினுஷாவிற்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. ஆண் துணை இல்லாமல் பெண்ணால் தனியாக வாழ முடியும் என்பதை இத்தொடர் பிரதிபலிக்கிறது.

கயல் : சன் டிவியில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கயல். இத்தொடரில் கயல் கதாபாத்திரத்தில் சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். தனியாளாக நின்று குடும்பத்தையே பார்த்துக் கொள்ளும் தைரியமான பெண்ணின் கதை கயல் தொடர். இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டி ஆர் பி யில் கயல் தொடர் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

ரோஜா : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ரோஜா. தொடரில் ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா நல்கரி நடித்து வருகிறார். டிஆர்பியில் ரோஜா தொடர் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இப்படம் மூலம் பிரியங்கா நல்கரிக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உள்ளது. இத்தொடர் ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Trending News