வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

டிஆர்பி கிங்கை வளைத்துப் போட்ட விஜய் டிவி.. ரெக்கார்டை உடைக்க போகும் பிக் பாஸ் சீசன் 7

Bigg Boss 7: சினிமாவை பொறுத்தவரையில் படத்தின் வசூல் குறித்து தான் பட்டியல் போடப்படும். ஆனால் சின்னத்திரை தொலைக்காட்சிகள் டிஆர்பி ரேட்டிங்கை மதிப்பிடுகிறார்கள். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சிகள் டிஆர்பியில் முதல் இடத்தை பெற வேண்டும் என்பதற்காக சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ ஆகியவற்றை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் இதுவரை விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சி பெற்ற டிஆர்பி ரேட்டிங் தற்போது வரை எந்த ஒரு தொலைக்காட்சியும் முறியடிக்க முடியவில்லை. இந்நிலையில் தனது சாதனையை பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் மூலம் முறியடிக்க போகிறது விஜய் டிவி. அதற்காக டிஆர்பி கிங்கை வளைத்து போட்டு இருக்கிறார்கள்.

Also Read : குழாயடி சண்டை போட பிக் பாஸ் வீட்டிற்கு வரும் 18 போட்டியாளர்கள்.. புது பொண்டாட்டியை தவிக்க விட்டு வரும் கிழவன்

அதாவது ஜோடி நம்பர் 1 சீசன் 2 தான் இப்போது வரை டிஆர்பியில் அதிக ரேட்டிங் பெற்று இருக்கிறது. இதற்கு காரணம் இந்நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கி இருந்தார். அதிலும் குறிப்பாக பப்லு பிரிதிவிராஜ் மற்றும் சிம்பு இடையே பிரச்சனை வெடிக்க அந்த ப்ரோமோ எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. அந்த நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

கடைசியில் அது நகைச்சுவைக்காக எடுக்கப்பட்டிருந்தாலும் இதுவரை அந்த ரெக்கார்டை முறியடிக்க முடியவில்லை. அதுமட்டுமன்றி அந்த நிகழ்ச்சியின் இயக்குனராக அப்போது நெல்சன் தான் பணியாற்றி வந்தார். இந்த சூழலில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சர்ச்சையான போட்டியாளர்கள் லிஸ்டில் முதலிடத்தில் பப்லு பிரிதிவிராஜ் இருக்கிறார்.

Also Read : ஒன்னு இல்ல ரெண்டு வீடா, டபுள் ட்ரீட் கொடுத்த கமல்.. சம்பவத்துக்கு தயாராகும் பிக் பாஸ் 7 ப்ரோமோ

சமீபத்தில் அவர் இளம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டது இணையத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. மேலும் எதுவாக இருந்தாலும் நேரடியாக பேசக்கூடிய பப்லு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல உள்ளதால் பல பிரச்சனைகள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் டிஆர்பியும் கண்டிப்பாக இதுவரை இல்லாத அளவுக்கு எகிறப்போகிறது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி செப்டம்பர் 24 அல்லது அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்க உள்ளது. இந்த முறை புதிய பரிமாணத்துடன் இரண்டு வீடுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்ப உள்ளதால் கூடுதல் எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.

Also Read : லிப்லாக், படுக்கையறை காட்சிகளில் தாராளம் காட்டும் பிக் பாஸ் ஜோடி.. எல்லாமே விஜய் அப்பா SAC போட்ட விதை

Trending News