வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பாரதிகண்ணம்மாவின் பரிதாப நிலை.. விஜய் டிவி டிஆர்பி-யை துவம்சம் செய்த சன் டிவி சீரியல்

ஆரம்பத்தில் மக்கள் அதிகமாக சன் டிவியில் ஒளிபரப்பான இரவு நேர தொடர்களை விரும்பிப் பார்த்து வந்தனர். பின்னடைவில் மதிய நேரங்களிலும் சன் டிவி சீரியல்களை ஒளிபரப்பு செய்தது. இந்நிலையில் விஜய் டிவி பெரும்பாலும் ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக ரசிகர்களை கவர்ந்தது.

சமீபகாலமாக சன் டிவியை பின்பற்றிய விஜய் டிவி முழுவதுமாக சீரியலை இறக்கியது. அதன்பிறகு சன் டிவியை ஓரங்கட்டும் அளவிற்கு விஜய் டிவி சீரியல்கள் சூடுபிடிக்கத் தொடங்கியது. எப்போதுமே வார டிஆர்பியில் முதல் ஐந்து இடங்களில் 4 இடங்களை விஜய் டிவி சீரியல்கள் இடம் பிடிக்கும்.

தற்போது சென்ற வார டிஆர்பி ரேட்டிங் வெளியாகியுள்ளது. இதில் சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட கயல் தொடர் முதலிடத்தை பிடித்துள்ளது. இத்தொடரில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கயல் தொடர் வந்த சில மாதங்களிலேயே விஜய் டிவி தொடர்களை ஓரம்கட்டி உள்ளது.

டிஆர்பி யில் இரண்டாமிடத்தை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் பிடித்துள்ளது. இத்தொடர் இரண்டாம் இடத்தை பிடிப்பதற்கு சுவாரஸ்யமான கதைக்களத்துடன் வருவதாலும், கோபி கதாபாத்திரத்தின் நடிப்பும் முக்கிய காரணமாக உள்ளது.

இத்தொடருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சுந்தரி தொடர் பிடித்துள்ளது. இத்தொடரில் கதாநாயகியாக உள்ள சுந்தரிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது. இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக 4 மற்றும் 5வது இடங்களை விஜய் டிவி கைப்பற்றியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா தொடர் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. எப்பொழுதும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் இத்தொடர் தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணம் இயக்குனர் ஒரே கதையை ஜவ்வாக இழுத்து வருவது தான். அடுத்து ஐந்தாவது இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் பிடித்துள்ளது. இதுவே இந்த வார சீரியல்களின் டிஆர்பி ஆகும்.

Trending News