கோலிவுட்டில் சமீபத்தில் வெளியான படங்களில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 5 படங்கள் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலும் விசாரணை படத்தில் போலீசார் பச்சை மட்டையால் கைதிகளை தோலுரித்தது கொலை நடுங்க வைத்தது.
நாயகன்: 1987 ஆம் ஆண்டு இந்திய அளவில் பேசப்பட்ட திரைப்படம் நாயகன். மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம், மும்பையில் தாதாவாக விளங்கிய வரதராஜன் முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தில் சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையினால் எப்படி தாதாவாக மாறுகிறார் என்பதை உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது..
விசாரணை: ஒரு கொலை வழக்கை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் போலீசார், அப்பாவிகளாக இருந்த 4 இளைஞர்களை அதில் சிக்க வைத்து விடுவார்கள். பின் போலீஸ் கஸ்டடியில் இருந்த அந்த 4 பேரையும் கொலை செய்ததை ஒத்துக் கொள்ள வேண்டும் என்று பச்சை மட்டையால் கொடூரமாக அடித்து தோலுரிப்பதும், தலைகீழாக கட்டி அடித்து துவைக்கும் காட்சிகள் பார்ப்போரை பதைபதைக்க வைக்கும்.
இந்த படம் சந்திரகுமார் எழுதிய லாக்கப் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. அதுமட்டுமல்ல சந்திரகுமாரின் உண்மையான அனுபவத்திலிருந்து எழுதப்பட்ட கதை தான் விசாரணை. மேலும் இந்த படத்தில் வரும் சம்பவங்களை பெரும்பாலும் சந்திரகுமாரின் நிஜ வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டதால், இந்தப் படத்தைப் பார்த்த பலரும் அதன் தாக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் பல நாள் தங்களது தூக்கத்தையும் தொலைத்தனர்.
Also Read: போலீஸின் அராஜகத்தை தோலுரித்த 5 படங்கள்.. ரீ-என்ட்ரி கொடுத்து மிரள விட்ட சூர்யா
ஜெய் பீம்: உலக அளவில் தமிழ் சினிமாவை கவனிக்க வைத்த திரைப்படம் ஜெய் பீம். இதில் பழங்குடி மக்கள் படும் கஷ்டங்கள், சட்டம் எப்படி எல்லாம் செயல்படுகிறது, அதிகாரம் படைத்தவர்கள் எப்படி தலைகால் புரியாமல் ஆடுகின்றனர். சாதிகள் எப்படி எல்லாம் செயல்படுகிறது என்பதையெல்லாம் இந்த படத்தில் வெளிப்படையாக காட்டியிருப்பார்கள். அது மட்டுமல்ல பழங்குடியினரை சேர்ந்த பெண் தன்னுடைய கணவர் காணாமல் போனதால், வழக்கறிஞர் சந்துரு மூலம் எப்படி தன்னுடைய கணவரை கண்டுபிடிக்கிறார். அவரை லாக்கப்பில் போலீஸ் எப்படி கொடுமைப்படுத்திக் கொன்றது என்பதையும் இந்தப் படத்தில் உணர்வு பூர்வமாக காண்பித்து உருக வைத்தனர்.
கர்ணன்: 2021 ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கர்ணன். இந்த படம் 1995 ஆம் ஆண்டு கொடியன்குளம் சாதி கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ஆகும். இதில் தீண்டாமை என்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை இயக்குனர், உண்மை கலந்த கதையை படமாக்கி வெளிச்சம் போட்டு காட்டியிருப்பார்.
விடுதலை: காமெடி நடிகர் சூரி ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் விடுதலை திரைப்படம். சமீபத்தில் வெளியான இந்த படம், திரையரங்கில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இது ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டது. இதில் சூரி உடன் விஜய் சேதுபதியும் ‘பெருமாள் வாத்தியார்’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ரயில் குண்டு வெடிப்புக்கு பிறகு குற்றவாளிகள் என கூறப்படும் மக்கள் படையின் தலைவராக வாத்தியார் பெருமாள் செயல்படுகிறார். அவரை பிடிக்க காவல்துறை தனி பிரிவை அமைத்து தேடுதல் வேட்டியில் இறங்கினார்கள். இதில் குமரேசன் என்ற கேரக்டரில் நடித்த சூரி ஒரு ஆர்வம் உள்ள கான்ஸ்டபிள் ஆக இருக்கிறார். அவரது நல்ல மனசாட்சியின் காரணமாக காவல்துறையின் மனிதாபிமானமற்ற நடைமுறைகளை கேள்வி கேட்கத் தொடங்குகிறார். இந்த படம் உணர்ச்சி பூர்வமாக இருந்ததால் பார்ப்போருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
Also Read: போலீஸ் கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டிய விசாரணை ராம்தாஸ்.. அவர் இயக்கியத்தில் ஹிட்டான 5 படங்கள்
இவ்வாறு உண்மையான கதையை வைத்து படமாக்கப்பட்ட இந்த 5 படங்களும் பார்ப்போரின் தூக்கத்தை தொலைக்கும் அளவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.