எதுவும் நடக்கலாம், எதையும் எதிர்பார்க்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக நிறைய விஷயங்களை கூறலாம். அந்தவகையில் நாம் ஆச்சரியப்படும் வகையில் நடைபெற்ற சில அபூர்வ கிரிக்கெட் நிகழ்வுகளை இதில் பார்க்கலாம்;
சச்சின் மற்றும் ராகுல் டிராவிட்: இவர்கள் இருவரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக செய்துள்ள சாதனையை பாருங்கள். அதிகபட்ச தனிநபர் இலக்கு மட்டும் தான் வித்தியாசம்
சுரேஷ் ரெய்னா: மிஸ்டர் 20- 20 என்று 20 ஓவர் போட்டிகளில் பெயரெடுத்த சுரேஷ் ரெய்னா செய்த ஒரு ஒற்றுமையான சாதனை.
99வது டெஸ்ட் போட்டி: சுனில் கவாஸ்கர், சௌரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மன் மூவரும் அவர்களது 99வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்துள்ளனர்.
முத்தையா முரளிதரன் மற்றும் மகிளா ஜெயவர்தனே: இவர்கள் இருவரும் இதுவரை ஜோடி சேர்ந்த 77 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். அதாவது மகிளா ஜெயவர்தனே கேட்ச் பிடித்து முரளிதரன் பவுலிங் செய்து 77 முறை அவுட் செய்துள்ளனர்
சகோதரர்கள் தினம்: பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி 2009ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் சகோதரர்கள் தினம் போல. இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் இருவரும், இலங்கைக்கு எதிராக 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவிற்கு வெற்றி தேடித் தந்தனர்.
அதேபோல் மற்றுமொரு சகோதரர்களான ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த டேவிட் ஹஸி மற்றும் மைக்கேல் ஹசி இருவரும் இணைந்து 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி தேடித்தந்துள்ளனர். இது இரண்டும் நடந்தது ஒரே நாளில்.
கிளார்க் மற்றும் குக்கின் ரெக்கார்டை சமம் செய்த டெண்டுல்கர்: சச்சின் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் செய்த மொத்த சாதனையையும், பிரித்து அலிஸ்டர் குக் மற்றும் கிளார்க் இருவரும் செய்துள்ளனர்.