Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அந்த Raid-கும் எனக்கும் சமந்தம் இல்ல, அவங்க பரப்பிய அவதூறு.. 14 வருஷ நட்பு – அருண்ராஜ் கொடுத்த விளக்கம்

அந்த Raid-கும் எனக்கும் சமந்தம் இல்ல, அவங்க பரப்பிய அவதூறு.. 14 வருஷ நட்பு – அருண்ராஜ் கொடுத்த விளக்கம்

2020இல் விஜய் மீது வருமானவரித் துறையினர் சுற்றி வளைத்து விசாரணை செய்து எந்த ஒரு ஆதாரமும் கிடைக்காமல் திரும்பி சென்றனர். அந்த நேரத்தில் Income Tax ரைடு செய்தது இரண்டு நாட்களுக்கு முன்னர் தவெகவில் கொள்கை பரப்புச் செயலாளராக […]

2020இல் விஜய் மீது வருமானவரித் துறையினர் சுற்றி வளைத்து விசாரணை செய்து எந்த ஒரு ஆதாரமும் கிடைக்காமல் திரும்பி சென்றனர். அந்த நேரத்தில் Income Tax ரைடு செய்தது இரண்டு நாட்களுக்கு முன்னர் தவெகவில் கொள்கை பரப்புச் செயலாளராக பதவி ஏற்ற அருண்ராஜ் என்ற செய்தி பரபரப்பாக பேசப்பட்டது.

ஐ ஆர் எஸ் பதவியில் இருந்து விலகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விஜய்யின் TVK கட்சியில் இணைந்துள்ளார். அவர் மீது இப்படிப்பட்ட அவதூறு பரப்புவது மட்டமான செயல் என்று முக்கிய அரசியல் புள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இது முழுக்க முழுக்க பொய்யான ஒரு செய்தி என்று தற்போது அருண் ராஜ் விகடன் பேட்டியில் தெளிவுபடுத்தி விட்டார். திமுக தான் இது போன்ற பொய்யான தகவல்களை சோசியல் மீடியாவில் பரப்பி வருகிறது. அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் எனக்கும் அந்த Raid-க்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.

பதவியை விட்டு கட்சிக்கு வருகிறேன் என்று விஜய்யிடம் கூறிய போது உங்கள் விருப்பம் மக்களுக்கான சேவை எங்கே இருந்தாலும் செய்யலாம் எப்பனாலும் நீங்க வரலாம் என்று பதில் அளித்துள்ளாராம். ஏற்கனவே திமுக-வின் IT Wing விஜய் நடிகர் என்பதால் நடிகைகளை வைத்து தளபதியை அவமானப்படுத்தி வந்தனர்.

பல நடிகைகளுடன் தொடர்பு படுத்தி பேசுவது, குடும்பத்தில் மனைவியுடன் விஜய் இருப்பதில்லை, தாய் தந்தையரை மதிப்பதில்லை இது போன்ற அவதூறுகளை பரப்பி வந்தது. தற்போது கட்சிக்குள் பதவி பெற்றவர்களை பற்றி தரை குறைவாக பேசி ஓப்பனாக மாட்டிக் கொண்டது தெரியவந்துள்ளது.

விஜய்-யை அடிக்க அடிக்க அவர் மீண்டும் மக்களிடத்தில் பெரும் ஆதரவை டபுள் மடங்காக பெற்று வருகிறார். இதனால் திமுகவுடன் உள்ள கூட்டணி கட்சிகளும் இதனை உடனே நிறுத்தி விட வேண்டும். எது எப்படியோ தளபதி விஜய்க்கு மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.