இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா மூவியாக ரிலீஸ் ஆகிறது.
பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த பட்ஜெட் 570 கோடி. இதுவரை எடுக்கப்பட்ட ஹை பட்ஜெட் படங்களிலேயே இது தான் அதிகமான பட்ஜெட் கொண்டது. பொதுவாக ஒரு ஹை பட்ஜெட் படம் ரிலீஸ் ஆக போகிறது என்றால் அந்த படத்தின் வெற்றிக்காக சப்போர்ட் செய்து வேறு எந்த படங்களும் அந்த படத்தோடு ரிலீஸ் ஆகாது.
ஆனால் பொன்னியின் செல்வன் ரிலீஸில் நடப்பதே வேறு. பொன்னியின் செல்வனுடன் போட்டி போட இரண்டு படங்கள் தயாராக இருக்கின்றன. ஒன்று செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படம், மற்றொன்று புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கும் விக்ரம் வேதா படத்தின் ஹிந்தி ரீமேக் படம். இந்த படம் பாலிவூடில் பொன்னியின் செல்வனுடன் மோதுகிறது.
தெலுங்கு இண்டஸ்ட்ரியின் பாகுபலி திரைப்படம் இதே போன்று ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சப்போர்ட் பண்ணுவதற்காக வேறு எந்த பெரிய ஹீரோக்களின் படங்களும் ரிலீஸ் ஆகவில்லை. இதே போன்று தான் KGF, RRR படங்களும் ரிலீஸ் ஆகும்போதும் இதே போன்று தான் சப்போர்ட் செய்தார்கள்.
Also Read: பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரமின் மகள்.. அடடே எவ்ளோ பெரிய பொண்ணா வளர்ந்துட்டாங்க
பொன்னியின் செல்வன் திரைப்படம் என்பது கோலிவுட்டின் நீண்ட கால கனவு. MGR முதல் கமல் வரை இந்த படத்தை எடுக்க முயற்சி செய்து முடியாமல் போனது. இப்போது அந்த மிகப்பெரிய கனவை மணிரத்தினம் நிஜமாக்கி திரைக்கு கொண்டு வந்து இருக்கிறார்.
வேறு மொழிப்பட இயக்குனர்கள் இவ்வாறு மோதினால் கூட பரவாயில்லை. பொன்னியின் செல்வனுடன் மோதும் இரண்டு இயக்குனர்களும் தமிழ் இயக்குனர்கள் தான். இப்படி தமிழனுக்கே தமிழன் சப்போர்ட் பண்ணாமல் போட்டி போடுவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்திருக்கிறது.
Also Read: மணிரத்தினத்தின் கழுத்தை நெறிக்கும் பொன்னியின் செல்வன் ரிலீஸ்.. சுயநல வாதியாக மாறிய நடிகர்கள்