கமலஹாசன் ரசிகர்களால் ஆண்டவர், உலகநாயகன் என அழைக்கப்படுகிறார். சினிமாவுக்காக பல அர்ப்பணிப்புகளை செய்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் பல புதிய தொழில்நுட்பங்களை முதலில் அறிமுகப்படுத்தியதும் கமல்ஹாசன் தான்.
சினிமாதான் வாழ்க்கை என தன் வாழ்வை சினிமாவிற்காக அர்ப்பணித்து இன்றுவரை பல சாதனைகளை செய்து வருகிறார். பல நடிகர்களும் செய்யத் தயங்கும் விஷயங்களையும் தைரியமாக கையாண்டு அதில் வெற்றி கண்டவர் கமலஹாசன்.
வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரை வரை தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளார் கமலஹாசன். மேலும், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டுள்ளார். ஆனால் கமலஹாசனுக்கு நீண்ட நாட்கள் நிறைவேறாத ஆசைகள் இரண்டு இருக்கிறது.
அதில் ஒன்றுதான் ஹாலிவுட் படம். உலகநாயகன் கமலஹாசன் இன்றுவரை ஒரு ஹாலிவுட் படத்திலும் நடித்ததில்லை. ரஜினி முதல் ஆரம்பித்து தற்போது தனுஷ் வரை பல நடிகர்கள் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். ஆனால் அந்த வாய்ப்பு கமலஹாசனுக்கு கிடைக்கவில்லை.
அதற்கு அடுத்தபடியாக கமல்ஹாசனுக்கு இன்று வரை ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. நான்கு தேசிய விருது வாங்கிய கமலுக்கு ஒரு ஆஸ்கர் விருது கூட கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கமலஹாசனை மக்கள் ஆஸ்கர் நாயகன், உலகநாயகன் என்றெல்லாம் பாராட்டுகின்றனர்.
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஆஸ்கர் வாங்கியது தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்தது. ஆனால் உலக நாயகன் கமலஹாசனுக்கு ஆஸ்கர் கிடைக்காதது மிகப் பெரிய வருத்தமாக தான் உள்ளது. சினிமாவில் பல சாதனைகள் புரிந்த கமலுக்கு இன்றுவரை அந்த இரண்டு ஆசைகள் கைகூடி வரவில்லை.