விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியால் கமலின் “ராஜ்கமல் நிறுவனம்” அடுத்தடுத்து படங்கள் தயாரிப்பதில் மும்முரமாக இருந்து வருகிறது. ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தனது அடுத்த படத்தின் கதையின் நாயகனாக உதயநிதி ஸ்டாலினை நடிக்க வைக்க கமல் முடிவு செய்தார்.
கடந்த சில காலமாகவே உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாரி செல்வராஜ் இயக்கும் “மாமன்னன்” படமே தனது கடைசி படம் என பல பேட்டிகளில் கூறியுள்ளார். இதற்கான காரணம் தனக்கு விரைவில் அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதை அவர் முன்பே கணித்து இருந்தார். அமைச்சர் பதவி கிடைத்தவுடன் தனக்கான பொறுப்புகளை அவர் தட்டிக்கழிக்க முடியாது என்பதும் அவருக்கு நன்கு தெரியும்.
Also Read: உதயநிதியிடம் சரணடைந்த வாரிசு.. உச்சகட்ட டென்ஷனில் விஜய்.!
சமீபத்தில் நடந்த ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் பதினைந்தாம் ஆண்டு விழாவில் கமல் அவர்கள் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பார் என்பதை அறிவித்தார். இந்த அறிவிப்பை ஆமோதிக்கும் விதமாக நன்றி தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ட்வீட் செய்திருந்தார்.
உதயநிதி ஸ்டாலின் உடனான இந்தப்படத்தின் அறிவிப்பு கமலின் அரசியல் வியூகம் என்று சிலர் பேசி வந்தனர். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் கமல் அவர்கள் உதயநிதி ஸ்டாலின் மூலம் திமுக தலைமையிடம் தனக்கு இரண்டு சீட் கேட்டு பெற்றுக்கொள்ளலாம் என்பதே அது! இந்நிலையில் கடந்த வாரம் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆனார்.
Also Read: இனிமேல் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் ஓனர் இவங்கதான்.. திட்டமிட்டு பொறுப்பை ஒப்படைக்கும் உதயநிதி
இதை தொடர்ந்து கமல் படத்தில் இருந்து தான் விலகுவதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்தார். இதற்கு வாழ்த்து தெரிவித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் கமல்ஹாசன். புத்திசாலித்தனமாக உதயநிதி ஸ்டாலின் கமலின் வியூகத்தை உடைத்தார் என்றே அறியப்படுகிறது.
உதயநிதி அவர்களின் இந்த அறிவிப்பால் மிகவும் கோபமான கமல் வருகிற 24-ஆம் தேதி ராகுல் காந்தி அவர்களின் “பாரத் ஜோடோ யாத்திரை”-யில் பங்கேற்பதாக அறிவித்திருக்கிறார். அவருடன் “மய்யம்” கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்பார்கள் என்றும் தெரிகிறது. இந்த அறிவிப்பால் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது!