செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

விஜய் , அஜித்தால் வந்த பிரச்னை.. சிம்புவுக்கு கண்டிஷன் போட்ட உதயநிதி

வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றிக்குப் பிறகு சிம்புவின் அடுத்த ரிலீஸ் ஆக வர இருப்பது பத்து தல திரைப்படம். இந்த படத்தை ஒபிலி என் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். மேலும் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடி கிடையாது. பத்து தல திரைப்படம் வரும் முப்பதாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

சிம்பு சில வருடங்களுக்கு முன்பாக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வந்தார். பின் உடல் எடையை குறைத்து சினிமாவில் மீண்டும் மாஸ் என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் அவருடைய நடிப்பில் வெளியான மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் அதிக உற்சாகத்தில் காணப்படுகிறார்கள். மேலும் பத்து தல திரைப்படத்தின் ரிலீஸ் நாளை ரொம்பவே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Also Read:வச்சது ஆப்பு என்று கூட தெரியாமல் பாராட்டிய உதயநிதி.. வெற்றி மாறனின் துணிச்சலான செயல்

இந்த நிலையில் சிம்பு படத்தின் ரிலீஸ் கொண்டாட்டத்திற்கு தடை போடும் விதமாக ரெட் ஜெயன்ட் நிறுவனம் ஒரு முடிவு எடுத்திருக்கிறது. அதாவது பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றால் அதிகாலை காட்சி கண்டிப்பாக இருக்கும். ஆனால் பத்து தலை திரைப்படத்திற்கு அதிகாலை காட்சி கிடையாது. முதல் காட்சியே காலை 8 மணிக்கு தான் ஆரம்பம் ஆகிறது. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.

மேலும் இந்த முறை சிம்புவின் பத்து தல திரைப்படத்துடன் மோத இருப்பது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த விடுதலை திரைப்படம். இந்த திரைப்படத்தின் விநியோகஸ்தரும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான். இதனால் இந்த நிறுவனம் விடுதலை திரைப்படத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:பல சேனல்களுக்கு வாரி வழங்கும் உதயநிதி.. பினாமி யார் என வெளிச்சம் போட்டு காட்டிய பிரபலம்

மேலும் தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படம் ஒரே நாளில் மோதியபோது ரெட் ஜெயன்ட் நிறுவனம் எப்படி அஜித் படத்துக்கு அதிக தியேட்டர்கள் கொடுத்ததோ அதேபோன்று இப்போது வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கொடுக்கப்படும் என ஏற்கனவே பேச்சுக்களும் எழுந்திருக்கின்றன. அதற்கேற்றார் போல் அதிகாலை காட்சிகள் சிம்பு படத்திற்கு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த முடிவின் உண்மை காரணம் என்னவென்றால் ஏற்கனவே அஜித், விஜய் என போட்டி போட்டு அதிகாலை ரிலீஸ் செய்யப்பட்டபோது ஏகப்பட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் நடைபெற்றது. மீண்டும் இதுபோன்ற சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்றுதான் உதயநிதி தெளிவாக பிளான் போட்டு அதிகாலை காட்சியை ரத்து செய்து இருக்கிறார்.

Also Read:உதயநிதிக்கு நல்ல பிசினஸ் கொடுத்த ஒரே படம் .. நடித்த 17 படத்தில் கெத்து காட்டிய வசூல்

Trending News