சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

120 கிலோ மாமிச மலையை நம்பி மோசம் போன பாகிஸ்தான் அணி.. அப்செட் தோல்வியால் வாரிசுக்கு வரும் சிக்கல்

UAE Record: 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.முதல் போட்டியிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது பாகிஸ்தான் அணி. கத்துக்குட்டி அணியான யுஏஇ இடம் தோற்றது. சொந்த மண்ணில் முதல் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது அமெரிக்கா அணி.

நேற்று அமெரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் விளையாடிய பாகிஸ்தானே 159 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை நோக்கி களம் இறங்கிய அமெரிக்க அணி ஆரம்பத்தில் இருந்தே நிதானமாகவும், அதிரடியாகவும் ஆடி 20 ஓவர் முடிவில் 159 ரன்களை எடுத்து போட்டியை சமன் செய்தது.

பின்னர் சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய அமெரிக்க அணி 19 ரன்கள் அடித்து கடினமான இலக்கை பாகிஸ்தான் அணிக்கு நிர்ணயித்தது, அனுபவம் வாய்ந்த பவுலர் அமீர் தான் அந்த சூப்பர் ஓவரை வீசினார். ஆனால் மூன்று வைடுபந்துகளை போட்டு பைஸ் மூலம் 8 ரன்கள் கொடுத்து விட்டார்.

அப்செட் தோல்வியால் வாரிசு வீரருக்கு வரும் சிக்கல்

20 ரன்கள் அடித்தால் வெற்றி என்று களம் கண்ட பாகிஸ்தான், முதல் பந்திலே பௌண்டரி அடித்து மிரட்டியது. இரண்டாவது பந்தில் அந்தணியின் அதிரடி ஆட்டக்காரர் இப்திகார் விக்கெட்டை இழந்தது. மொத்தம் பாகிஸ்தான் அணியால் சூப்பர் ஓவரில் 13 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்த போட்டியில் முன்னாள் விக்கெட் கீப்பர் மொயின் கானின் வாரிசான அசாம் கான் விளையாடினார். அப்பா தான் பல சிபாரிசுகள் செய்து இவரைஅணிக்குள் விளையாட வைத்துள்ளார். இந்த போட்டியில் கோல்டன் டாக் ஆகி வெளியேறினார் அசாம் கான். இவரிடம் பிட்னஸ் இல்லை என்றும், பில்டிங் சரி இல்லை என்றும் பாகிஸ்தானில் எதிரலை கிளம்பி வருகிறது.

Trending News