வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

அழகான மருமகள்களாக தோன்றி, அசரவைத்த 4 நடிகைகள்.. இளசுகளை கிரங்கடித்த சூப்பர் ஸ்டாரின் மருமகள் 

4 actresses as beautiful daughters-in-law: சமீப காலத்தில் வெளியான படங்களில் அழகான மருமகள்களாக தோன்றி நான்கு நடிகைகள் ரசிகர்களிடம் பிரபலமானவர்கள். அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டாரின் மருமகளாக கொண்டாடப்பட்ட நடிகை மிர்னா மேனன் இப்போது சோசியல் மீடியாவில் இளசுகளை வசியம் செய்கிறார். 

திரிஷா: கோலிவுட்டின் எவர்கிரீன் ஜோடியாக பார்க்கப்பட்ட விஜய்- திரிஷா இருவரும் கில்லி படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின், லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் மறுபடியும் ஜோடி போட்டனர். இந்த படத்தில் விஜய் மற்றும் திரிஷா இருவருக்கும் திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருந்தனர். அதோடு விஜய்யின் தந்தையாக சஞ்சய் தத் நடித்தார். இதனால் சஞ்சய் தத்தின் மருமகளாக திரிஷா, இதில் குடும்ப குத்து விளக்காகவே தெரிந்தார். 

மிர்னா மேனன்: தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து தமிழில் பட்டதாரி என்ற ஒரே ஒரு படத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை மிர்னா மேனன். இவரை பட்டதாரி படத்தில் நடித்த போது யாருமே கண்டுக்கவில்லை. ஆனால் ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த பிறகு, சூப்பர் ஸ்டார் வீட்டு குத்துவிளக்கு என்று இவரை தலைவரின் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஜெயிலர் படத்திற்கு பிறகு அதிக ரசிகர்களை உருவாக்கிக் கொண்ட மிர்னா மேனன், இப்போது சோசியல் மீடியாவை ரணகளம் செய்து கொண்டிருக்கிறார். இவர் இப்போது  தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு, இளசுகளை ஜொள்ளு விட வைக்கிறார்.

Also Read: விஜய் படமா இருந்தாலும் எங்களுக்கு வேணாம்.. பேராசையால் திக்கு தெரியாமல் தவிக்கும் GOAT

அழகான மருமகள்களாக 4 நடிகைகள் நடித்த மறக்க முடியாத படங்கள் 

ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன்: சாக்லேட் பிரௌனியாக ரசிகர்களை வசப்படுத்தியவர் தான் நடிகை ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன். பிரபல மாடல் அழகியான இவர், முதல் முதலாக  சவரக்கத்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் கீ, ஜாடா போன்ற படங்களிலும் நடித்திருந்தார். ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசனின் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் படத்தில் கமலின் மருமகளாக நடித்த பிறகுதான் பட்டி தொட்டி எங்கும் பேமஸானார் நடிகை ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன். 

இந்த படத்தில் கமலை சுத்தமாகவே வெறுக்கக்கூடிய மருமகளாகவே நடித்தார். இந்த படத்திற்கு பிறகு கமலின் மருமகளாகவே அடையாளம் காணப்பட்டு, சோசியல் மீடியாவில் மிகவும் சுறுசுறுப்பான ஸ்வாதிஷ்டா கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டு, ஏகப்பட்ட லைக்ஸ்களையும் கமெண்ட்டுகளையும் தட்டி தூக்குகிறார்.

அமலாபால்: சிந்து சமவெளி என்ற சர்ச்சைக்குரிய படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர்தான் நடிகை அமலா பால். இந்த படத்தில் கணவரை விட்டுவிட்டு மாமனாருடன் தகாத உறவில் இருக்கக்கூடிய மருமகளின் கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்தார். இது சர்ச்சைக்குரிய கேரக்டர் என்றாலும், இவ்வளவு அழகான மருமகளா! என்று இந்த படம் வெளியான போது எல்லோரும் அமலாபாலின் அழகை வர்ணித்தனர்.

Also Read: விஜய் வைத்து பழிக்கு பழி சம்பவம் செய்ய போகும் ரஜினி.. யாருமே எதிர்பார்க்காத அரசியல் ஆட்டம்

Trending News