வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

இயக்குனராக வெற்றி கண்ட உலகநாயகன்.. சினிமாவை கத்துக்க மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 5 படங்கள்

உலக நாயகன் கமலஹாசன், சினிமாவில் அனைத்தையும் கற்றறிந்த ஞானி என்றே சொல்லலாம். சினிமாவின் மீது என்றுமே தீராத காதல் கொண்டவர் இந்த கலைஞன். நடிகர், வசன கர்த்தா, நடன இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என பன்முகத் திறமை கொண்ட கமலஹாசன் அவர்கள், இயக்குனர் அவதாரமும் எடுத்திருக்கிறார். இயக்குனராக வெற்றி கண்ட உலகநாயகன்,

சாச்சி 420: 1996 ஆம் ஆண்டு தமிழில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அவ்வை சண்முகி’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் தான் சாச்சி 420. இந்த படத்தில் கமல்ஹாசன், தபூ, நாசர், அம்ரீஷ் புரி, ஓம் பூரி ஆகியோர் நடித்திருந்தனர். ஹிந்தி இயக்குனர் ஷாண்டனு ஷோரி இந்த படத்தை வெறும் 5 நாட்கள் இயக்கிய நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இந்த திரைப்படத்தின் இயக்குனரானார் கமல்.

Also Read: இந்திய சினிமாவை மிரள வைத்த கமல்ஹாசனின் 6 படங்கள்.. இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்த விக்ரம்

ஹேராம்: ஹேராம் 2000 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம். இந்த படத்தை கமல், எழுதி, இயக்கி, தயாரித்திருந்தார். சுதந்திரத்திற்கு பின்னான இந்தியாவை மையமாக கொண்ட கதை இது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சம்பளம் இல்லாமல் நடித்துக் கொடுத்தார். இந்த படம் அந்த வருடத்திற்கான ஆஸ்கார் நாமினேஷனுக்கு சென்றது.

விருமாண்டி: 2004 ஆம் ஆண்டு கமலஹாசன் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்த திரைப்படம் விருமாண்டி. ரஷோமோன் விளைவு என்ற திரைக்கதையை மையமாக கொண்டது. இந்த படத்தில் அபிராமி, பசுபதி, நெப்போலியன் ஆகியோர் நடித்திருந்தனர். வசூல் ரீதியாக வெற்றி பெற்ற இந்த திரைப்படம் சாதி அரசியல், மரணதண்டனை பற்றி பேசியதால் பல விமர்சனங்களை சந்தித்தது.

Also Read: 65 ஆண்டுகளாக கமல் சம்பாதித்த மொத்த சொத்து.. லண்டனில் வீடு, சொகுசு காரு என மறைக்கப்பட்ட லிஸ்ட்

விஸ்வரூபம்: கமலஹாசன் எழுதி, இயக்கி, தயாரித்து 2013 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் விஸ்வரூபம். இந்த படம் மதக்கலவரத்தை உருவாக்கும் என பல அமைப்புகள் கமலஹாசனை எதிர்த்து போராடினர். அதன் பின்னர் சர்ச்சைக்குரிய பல காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியிடப்பட்டது. 95 கோடியில் உருவான இந்த படம் 220 கோடி வசூல் செய்தது.

விஸ்வரூபம் 2: தமிழிலும், இந்தியிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் விஸ்வரூபம் 2. உலகநாயகன் கமலஹாசன் எழுதி, இயக்கி, நடித்த இந்த படம் 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தை கமலஹாசனுடன் இணைந்து அவருடைய மூத்த சகோதரர் சாருஹாசனும் தயாரித்து இருந்தார்.

கமலஹாசனின் மிகப்பெரிய கனவுப்படம் தான் மருதநாயகம். இந்த படத்தை கமலஹாசன் எழுதி, இயக்கி, தயாரிக்க இருந்த நிலையில் நிதி நெருக்கடி காரணமாக முன்னோட்ட காட்சிகளோடு நிறுத்தப்பட்டது. மேலும் 100 கோடி பட்ஜெட்டில் தலைவன் இருக்கிறான் என்னும் படத்தை கமல் இயக்க இருக்கிறார்.

Also Read: கமலுக்கு வில்லனாக சத்யராஜ் போட்ட கண்டிஷன்.. துண்ட காணும், துணிய காணும் என ஓடிய இந்தியன் 2 டீம்

- Advertisement -spot_img

Trending News