புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ஜெயிலர் ட்ரைலரில் காண்பிக்காத 3 டாப் ஹீரோக்கள்.. பக்காவாக காய் நகர்த்திய நெல்சன் கூறும் காரணம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் ட்ரைலர் தான் இப்போது யூடியூபில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் மட்டும்இன்றி மற்ற மொழிகளில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். மேலும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில் ஜெயிலர் ட்ரெய்லர் வெளியானதில் இருந்து இணையத்தில் ஒருபுறம் பாசிட்டிவ் விமர்சனங்களும், மறுபடியும் நெகட்டிவ் விமர்சனங்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலும் ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியாகி உள்ள இந்த ட்ரைலரில் மூன்று முக்கிய நபர்களை காட்டாமல் இருந்துள்ளார் நெல்சன்.

Also Read:அய்யய்யோ விட்டுட்டோமே என புலம்பும் ரஜினி.. மொத்த பெயரையும் தட்டி சென்று ஹீரோ!

அதாவது கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்பட்டது. அதேபோல் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். மேலும் ஜெயிலர் ட்ரெய்லர் மற்ற மொழிகளிலும் வெளியான நிலையில் கன்னட மற்றும் மலையாள ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனென்றால் சிவராஜ் மற்றும் மோகன்லால் ட்ரைலரில் இடம் பெறுவார்கள் என பெரிதும் எதிர்பார்த்தனர். அவர்களுக்கு ஏமாற்றத்தை தான் நெல்சன் கொடுத்திருக்கிறார். அதேபோல் ஜாக்கி ஷெராப் ஒரே ஒரு காட்சியில் காண்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலும் வயசான கெட்டப்பில் இருக்கிறார்.

Also Read:ரஜினிக்கு அலர்ஜியான 5 விஷயங்கள்.. எல்லாத்துக்கும் முடிவு கட்டி ஓட விட்ட சூப்பர் ஸ்டார்

மேலும் முக்கியமாக தமன்னா இடம் பெறாதது ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் ஜெயிலர் படத்தின் முதல் பாடலான காவாலாவில் ரஜினி விட தமன்னாவின் பாடலாக தான் அது அமைந்திருந்தது. அப்படி இருக்கும் சூழலில் ட்ரைலரில் தமன்னா ஏன் இடம் பெறவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏனென்றால் இவர்களின் கதாபாத்திரத்தை மிகவும் சஸ்பென்ஸாக நெல்சன் வைத்திருக்கிறாராம். ஆனால் ஜெயிலர் மல்டி ஸ்டார் படம் இல்லை என்றும் சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் இருவரும் கேமியோ தோற்றத்தில் தான் நடித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. ஆகையால் ஜெயிலர் படம் வெளியானால் தான் இதன் உண்மை நிலவரம் தெரியவரும்.

Also Read:ரஜினி நடிக்க மறுத்த படத்தை நடித்துக் காட்டிய ரசிகன்.. உச்சகட்ட குதூகலத்தில் கும்மாளம் போடும் மொத்த டீம்

Trending News