வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

யாராலும் நடிக்க முடியாத கமலின் அந்த கதாபாத்திரம்.. இன்று வரை வரலாறு படைக்கும் கமல்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்புக்காக எதையும் செய்யக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். கமலை பார்த்து பலர் சினிமாவுக்கு வரவேண்டும் என்ற ஆசையில் வெள்ளித்திரையில் நுழைந்துள்ளனர். ஆனால் இன்று வரை கமலின் அந்த கதாபாத்திரத்தை யாராலும் நடிக்க முடியவில்லை.

பொதுவாக இப்போது உள்ள ஹீரோக்கள் எல்லாவற்றுக்குமே டூப் போட்டு நடிக்கிறார்கள். ஆனால் கமலை பொருத்தவரையில் தன்னால் முடிந்தவரை தானாகவே நடிக்க வேண்டும் என்று மெனக்கெட்டு பல கடினமான காட்சிகளில் நடிக்க கூடியவர். இளமைக்காலத்தில் மட்டுமல்லாமல் இப்போதும் அதை பின்பற்றி வருகிறார்.

Also Read : கஜானாவை திறக்காமலே படத்தை தயாரிக்கும் கமல்.. ராஜதந்திரியாக மாறிய உலக நாயகன்

இந்நிலையில் கமலின் திரை வாழ்க்கையில் யாராலும் எளிதில் மறக்க முடியாத படங்கள் பல உண்டு. அதில் அபூர்வ சகோதரர்கள் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்துள்ளது. இதில் மையக்கதை என்னவென்றால் சாதாரண பழி வாங்கும் கதை அம்சம் தான்.

ஆனால் இந்த படத்தில் குள்ள கமலாக நடித்த அப்பு கதாபாத்திரம் கமலின் யோசனையாம். இதற்காக முழங்காலை மண்டியிட்டு கஷ்டப்பட்டு நடித்தாராம். அவர் சிரமப்படுவதை பார்த்து வேண்டாம் என்று படக்குழுவினர் சொன்னாலும் யார் சொல்வதையும் கமல் கேட்க மாட்டாராம்.

Also Read : இப்பவே தோல்வி பயத்தை காட்டும் கமல்.. பதட்டத்துடன் இருக்கும் லியோ படக்குழு

அப்பு கதாபாத்திரத்திற்காக உயிரைக் கொடுத்து நடித்தாராம். ஒரு கட்டத்தில் நிறைய நேரம் மண்டியிட்டு நடந்ததால் முழங்காலில் ரத்தம் சொட்ட ஆரம்பித்து விட்டதாம். அப்போது அங்கு படக்குழுவினர் மற்றும் வேலை செய்யும் தொழிலாளர்கள் கமலை பார்த்து கண்ணீர் விட்டனராம்.

இப்படி ஒரு நடிப்பு தேவையா என பலர் கேட்க அதைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் கமல் அன்று நடித்தது இன்றும் பேசப்பட்டு வருகிறது. இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் தற்போது வரை யாரும் நடிக்கவில்லை. அப்படி ஒரு வரலாற்றை உலக நாயகன் கமல் அபூர்வ சகோதரர்கள் படத்தின் மூலம் படைத்துள்ளார்.

Also Read : ரஜினி, விஜய் வெற்றி பெற்றால் தான் இருக்க முடியும்.. ஆனா கமல் அப்படி இல்லை, சர்ச்சையை கிளப்பிய இயக்குனர்

Trending News