அண்மையில் மத சார்பான அரசியல் இந்தியாவில் அதிக அளவில் நிலவி வருகிறது என அரசியல் தலைவர்கள் முதல் மக்கள் வரை பலரும் விமர்சித்து வருகின்றனர். ஒன்றிய அரசின் ஆட்சி முழுக்க முழுக்க இந்து மதத்தையே சார்ந்துள்ளது என்ற பல குற்றச்சாட்டுகளும் உண்டு. இதனால் பாதிக்கப்படுவோர் தங்களது உரிமைகளை காக்க பல இடங்களில் போராடி வருகின்றனர்.
அதனடிப்படையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரபல நடிகை ஒருவர், அவரது பெயரை பார்த்து விமான நிலையத்தில் மதத்தின் அடிப்படையில் நடைபெற்ற சோதனை குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக பலரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
Also Read: தளபதி 67 இல் இணைந்த பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்.. ஒருவேளை விஜய்க்கு ரத்த சொந்தமா இருக்குமோ?
கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிகஃபாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் நடிகை சனம் ஷெட்டி. தற்போது விளம்பரங்களில் நடிப்பது, புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார். அண்மையில் இவர் கோவை விமான நிலையத்திலிருந்து சென்னை புறப்பட தயாராக இருந்தார். அப்போது இவருடன் சேர்த்து 190 பயணிகள் தனியார் விமான நிறுவனமான ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க தயாராக இருந்தனர்.
இதனிடையே விமான நிலையத்தில் வழக்கம்போல பயணிகளின் பைகளையும், அவர்களையும் ஊழியர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது சனம் ஷெட்டியுடன் சேர்த்து இன்னும் 2 நபர்களை மட்டும் தனியாக அழைத்து சென்று விமான ஊழியர்கள் சோதனை செய்துள்ளார்கள். இதில் சனம் ஷெட்டியுடன் வந்த இருவரும் இஸ்லாமியர்களாம்.
Also Read: ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த 5 பிக் பாஸ் போட்டியாளர்கள்.. டைட்டிலை அடிக்க போகும் அதிர்ஷ்டசாலி
இதனால் கடுப்பான சனம் ஷெட்டி அந்த ஊழியர்களிடம் ஏன் எங்களை மட்டும் குறிப்பிட்டு, எங்கள் பைகளை செக் செய்கிறீர்கள், ஏன் மற்ற பயணிகளை சோதனை செய்யாமல் உள்ளீர்கள் என கேள்விக் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ஊழியர்கள் குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளதையொட்டி இந்த சோதனை நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.
உடனே சனம் ஷெட்டியும் அப்போது மற்றவர்களின் பைகளையும் சோதனை செய்யுங்கள் என வாதம் செய்துள்ள நிலையில், அந்த ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடுப்பில் சென்னைக்கு வந்த சனம் ஷெட்டி வீடியோ பதிவு மூலமாக நடந்த நிகழ்வை பகிர்ந்துள்ளார். அதில் எனது பெயர் சனம் ஷெட்டி என்பதால் என்னையும், அந்த 2 இஸ்லாமிய சகோதரர்களையும் மட்டும் அழைத்து குறிப்பிட்டு சோதனை செய்தது தன்னால் ஏற்க முடியவில்லை என்றார்.மேலும் இது தவறான செயல் என்றும் சனம் ஷெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.