புதன்கிழமை, ஜனவரி 22, 2025

வாயில் விஷத்தோடு வடிவுக்கரசி நடித்த 5 படங்கள்.. தேள் போல் சிவாஜியையும், ரஜினியையும் கொட்டிய வேதவள்ளி

Vadivukarasi: தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக வேண்டும் என்ற ஆசையில் வந்து, பன்முகத் திறமை கொண்ட நடிகை ஆக உருவெடுத்தவர் தான் வடிவுக்கரசி. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அப்படியே உள்வாங்கி நடிக்கக்கூடிய நடிகைகளில் ஒருவர். உச்ச நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே தன்னுடைய வில்லத்தனத்தால் மிரள வைத்திருக்கிறார் இவர். வில்லத்தனத்தில் மற்ற நெகடிவ் கேரக்டர்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு இவர் நடித்த ஐந்து படங்களை பார்க்கலாம்.

பொறந்த வீடா புகுந்த வீடா: பானுப்ரியா மற்றும் சிவகுமார் நடித்த பொறந்த வீடா புகுந்த வீடா திரைப்படத்தில் சிவகுமாருக்கு அம்மாவாக நடித்திருப்பார் வடிவுக்கரசி. பிள்ளைகளைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் சுற்றி தெரியும் தாயாகவும், அதே நேரத்தில் மகனின் மூலமாக மருமகளை கொடுமைப்படுத்தும் கொடுமைக்கார மாமியார் ஆகவும் வில்லத்தனத்தில் கலக்கியிருப்பார்.

Also Read:கமலஹாசன் கூட நடித்ததற்கு செவுலில் பளார் வாங்கிய நடிகை.. அல்ட்ரா மார்டன் ஆக்டரை வச்சு செய்து உலக நாயகன்

சத்யா: உலக நாயகன் கமலஹாசனின் வெற்றி படங்களில் ஒன்று சத்யா. இந்த படம் 1988 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. சமூகத்தில் நடக்கும் அநீதிகளை தட்டி கேட்கும் இளைஞனாக கமல் இதில் நடித்திருப்பார். கமலின் கொடுமைக்கார சித்தியாக வடிவுக்கரசி கமலுக்கு ஈடான நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.

முதல் மரியாதை: பாரதிராஜா இயக்கத்தில், சிவாஜி கணேசன் நடிப்பில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் முதல் மரியாதை. இந்தப் படத்தில் வடிவுக்கரசி, சிவாஜியின் மனைவியாக பொன்னாத்தாள் என்னும் கேரக்டரில் நடித்திருப்பார். சிவாஜி, படத்தின் பாதி வரைக்கும் தன் மனைவியின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் பயந்து நடக்கும் கணவனாக நடித்திருப்பார். வடிவுக்கரசியின் சினிமா கேரியரில் இது மிகவும் முக்கியமான படம்.

Also Read:63 வயது நடிகருக்கு 4-வது மனைவியான ஆர்ஜே பாலாஜியின் மாமியார்.. நீதிபதி வச்ச ஆப்பு!

அருணாச்சலம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் படத்தில் அவர் கிராமத்தில் இருக்கும் வரை அவருக்கு வில்லி கேரக்டராக வடிவுக்கரசி நடித்திருப்பார். ரஜினி தன் சொந்த பேரன் இல்லை, எடுத்து வளர்த்தவர் என்பதை காரணம் காட்டி ஒவ்வொரு பேச்சிலும் விஷத்தை தேளாக கக்கி இருப்பார். ஒரு சில காட்சிகளில் வடிவுக்கரசியை பார்த்து ரஜினி பயப்படுவது போலவும் இருக்கும்.

தவசி: தவசி படத்தில் விஜயகாந்த் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். வடிவுக்கரசி தன் மகனின் சாவுக்கு காரணம் விஜயகாந்த் தான் என தவறாக புரிந்து கொண்டு, அவருடைய மகனை பழி வாங்கும் நோக்கத்தில் தன் வீட்டிற்கு அழைத்து சென்று விடுவார். இதில் வில்லத்தனமும், மகனை இழந்த தாயின் ஏக்கமும் கலந்தவாறு நடித்திருப்பார்.

Also Read:பாசத்தால் உருக வைத்த டி ராஜேந்தர் 5 படங்கள்.. அண்ணன் தங்கை பாசத்தை காட்டிய ‘என் தங்கை கல்யாணி’

Trending News