வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் வலிமை.. ரஜினியை பின்னுக்கு தள்ளிய அஜித்!

அஜித் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் வலிமை திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படம் வசூலிலும் பல சாதனை படைத்து வருவதால் படக்குழு தற்போது மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கிறது.

அதாவது தமிழ்நாட்டில் வலிமை திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களை காட்டிலும் அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் முதல் நாள் 34.92 கோடி வசூல் செய்தது.

இதையடுத்து இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான 2.o திரைப்படம் வெளியான முதல் நாள் 33.58 கோடியை வசூலித்தது. இந்த இரு படங்கள் தான் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான முதல் நாளிலேயே அதிக வசூலை வாரி குவித்த படங்களாக இருந்துள்ளது.

ஆனால் வலிமை திரைப்படம் இந்த இரண்டு படங்களின் சாதனையை முறியடித்து தற்போது புதிய சாதனையை படைத்து முதலிடத்தில் இருக்கிறது. 180 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வசூலை படைத்து வருகிறது.

அதில் தமிழ்நாட்டில் வலிமை திரைப்படம் வெளியான முதல் நாள் மட்டுமே 36.17 கோடியை வசூலித்துள்ளது. இப்படி ஒரு சாதனையை இதுவரை வெளியான எந்த திரைப்படங்களும் நிகழ்த்தியது கிடையாது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

மேலும் இப்படம் விடுமுறை இல்லாத நாளில் வெளியான போதிலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை குவித்துள்ளது. அதனால் இப்படத்திற்கு இனி வரும் வார இறுதியில் இதைவிட அதிக வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்கள் கழித்து அஜித்தை திரையில் பார்த்து கொண்டாடி வரும் அவருடைய ரசிகர்கள் படத்தின் இந்த வசூல் சாதனையை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி தீர்க்கின்றனர்.

Trending News