திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஆதித்த கரிகாலனாக நடிக்க இருந்த வந்திய தேவன்.. கடைசியில் மணிரத்னம் வைத்த டிவிஸ்ட்

மணிரத்னம் இயக்கத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் தற்போது வரை வசூலில் பல சாதனைகளை முறியடித்து வருகிறது.

இப்படம் குறித்து ரசிகர்களுக்கு தெரியாத பல சுவாரஸ்ய நிகழ்வுகளும் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது. அதில் லேட்டஸ்டாக வெளியான ஒரு விஷயம் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் நடித்திருந்தார்.

Also read : உச்சகட்ட எதிர்பார்ப்பில் வெளிவர உள்ள 8 படங்கள்.. பிரம்மாண்டத்தை எதிர்நோக்கி பொன்னியின் செல்வன் 2ம் பாகம்

கதையிலேயே மிகப்பெரிய சஸ்பென்ஸை உருவாக்கும் கேரக்டர் இதுதான். ஆனால் இந்த கதாபாத்திரத்திற்காக மணிரத்னம் முதலில் தேர்வு செய்தது கார்த்தியை தான். இப்படத்தில் வந்தியத்தேவன் என்னும் கலகலப்பான கேரக்டரில் நடித்திருக்கும் கார்த்திக்கு முதலில் ஆதித்த கரிகாலன் ஆக நடிக்கும் வாய்ப்புதான் கிடைத்திருக்கிறது.

பல வருடங்களுக்கு முன்பே இந்த கதாபாத்திரம் குறித்து மணிரத்தினம் கார்த்தியிடம் விலாவாரியாக விளக்கி இருக்கிறார். கதையை கேட்ட கார்த்திக்கும் ரொம்ப பிடித்துப் போகவே ஆதித்த கரிகாலனாக நடிக்க ஆசைப்படுவதாக மணிரத்திடம் கூறியிருக்கிறார்.

அதன் பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாகும் நேரத்தில் மணிரத்தினம் கார்த்திக்கு வந்தியத்தேவன் கேரக்டர் தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறி அதில் நடிக்க சொல்லி இருக்கிறார். அவரும் தன் குருநாதரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.

Also read : வேகமாக பாக்ஸ் ஆபிஸில் 200 கோடியை தொட்ட 3 படங்கள்.. ரஜினிக்கே டஃப் கொடுத்த பொன்னியின் செல்வன்

அதைத்தொடர்ந்து ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு நடிகர் விக்ரமை மணிரத்தினம் தேர்ந்தெடுத்துள்ளார். உண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ள அத்தனை கதாபாத்திரங்களும் பக்காவாக பொருந்தி இருக்கிறது. இதற்கான முழு பெருமையும் மணிரத்தினத்தை மட்டுமே சேரும்.

தற்போது கார்த்தியின் வந்தியத்தேவன் கதாபாத்திரம் பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு வேளை அவர் ஆதித்த கரிகாலன் ஆக நடித்திருந்தால் கூட இந்த அளவுக்கு அவருக்கு புகழ் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான். அந்த வகையில் மணிரத்னம் சரியாக தான் தேர்வு செய்திருக்கிறார்.

Also read : பொன்னியின் செல்வனால் பலத்த அடி வாங்கிய தனுஷ்.. கிடப்பில் போட்ட படத்தை கையில் எடுத்த செல்வராகவன்

Trending News