வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கட்டுமஸ்தான சரத்குமாருக்கு போட்டியா வரும் புது மாப்பிள்ளை.. மோசமான பாடி பில்டர் வலையில் சிக்கிய வரலட்சுமி

Varalakshmi’s new bridegroom who competes with strong man Sarathkumar: தமிழ் சினிமாவில் நடிகையாக தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இல்லாமல்  குணச்சித்திர நடிகையாகவும், வில்லியாகவும் கலக்கியவர் வரலட்சுமி சரத்குமார். சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் தென்னிந்திய சினிமாவின் சிறந்த வில்லி நடிகையாக வலம் வருகிறார் வரலட்சுமி.

தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் துணிச்சலுடன் கையாள கூடிய வரலட்சுமிக்கு தாரை தப்பட்டை, சண்டக்கோழி 2, சர்க்கார், கொன்றால் பாவம் போன்ற படங்கள் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. 

தனது முதல் படமான போடா போடி படத்தில் நடித்திருந்த சிம்புவுடன் கிசுகிசுக்கப்பட்டார் வரலட்சுமி. இதனையடுத்து சமீபத்தில் முரட்டு சிங்கிளான சிம்பு வரலட்சுமியை, எனது சிறந்த தோழி என்று பெருமைப்படுத்தி விட்டுப் போனார்.

Also read : ராதிகாவுக்கும் வரலட்சுமிக்கும் இருந்த மனஸ்தாபம்.. உண்மையை போட்டு உடைத்த சரத்குமார்

தமிழ் சினிமாவை விட தெலுங்கு நடிகர்களின் ஃபேவரைட் வில்லியாக இருக்கும் வரலட்சுமிக்கு சமீபத்தில் மார்ச் 1 தேதி பிரம்மாண்ட முறையில்  குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மும்பை தொழிலதிபர் நிக்கேலாய் சச்தேவ் உடன் நிச்சயதார்த்தம் நடந்தது

நீண்ட தலைமுடியுடன் கட்டுமஸ்தான பாடி பில்டர் தோற்றத்துடன் ஹாலிவுட் ஹீரோ போல் காணப்படும் மணமகன் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாருக்கு டஃப் கொடுப்பார் போல. இவர் மும்பையில் ஓவியம் மற்றும் கைவினைப் பொருட்களுடன் கூடிய கேலரி ஒன்றை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

பேட்டி ஒன்றில் திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை  நிஜ வாழ்க்கையில் யாரையும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று உறுதியாக இருந்த வரலட்சுமிக்கு 14 வருட காதலுடன் பாடி பில்டர் போல் இருக்கும் இவரின் வலையில் சிக்கியது எப்படி? என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

திருமண தேதியை விரைவில் அறிவிக்க இருக்கும் வரலட்சுமி நிச்சயதார்த்த புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகிய நிலையில் ரசிகர்களும் திரை உலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ஆர்யா “வாழ்த்துக்கள் செல்லம்” என  கூறியுள்ளதை அடுத்து “நன்றி செல்லம்” என ரிப்ளே கொடுத்துள்ளார் வரலட்சுமி.

Also read: ரகடான குரலில் தெறிக்கவிடும் 5 நடிகைகள்.. வரலட்சுமிக்கு வில்லி வாய்ப்பு வந்ததன் ரகசியம்

Trending News