தளபதி விஜய் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் உள்ள இயக்குனர், தயாரிப்பாளர் என பெரும்பாலானோர் தெலுங்கு திரை உலகைச் சார்ந்தவர்கள். இந்நிலையில் துணிவு படத்திற்கு போட்டியாக வாரிசு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது
சமீபகாலமாக விஜய்யை சுற்றி பல பிரச்சனைகள் தொடர்ந்து வருகிறது. அதாவது விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படத்திற்கு போட்டியாக கே ஜி எஃப் 2 படம் வெளியானது. ஆகையால் பீஸ்ட் படம் சற்று சருக்களை சந்தித்தது. இந்நிலையில் வாரிசு படம் தொடங்கியதில் இருந்தே விஜய்க்கு பல வகைகளில் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது.
Also Read : கமலும் இல்லை, விஜய் சேதுபதியும் இல்லை.. டாப் ஆக்டரை பிடித்த வினோத்
முதலாவதாக வாரிசு படப்பிடிப்பில் எடுக்கப்படும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. தினமும் இது போன்ற போட்டோக்கள் வெளியாவதால் கடும் கோபத்தில் பவுன்சர்கள், லைட் மேன் போன்ற டீமை மாற்றச் செய்து புதிய டீம் அமைக்க சொல்லி உள்ளார் விஜய்.
இவ்வாறு ஒவ்வொரு சின்ன விஷயத்திலிருந்து தொடங்கி பல விஷயங்களை படக்குழு சொதப்பி உள்ளனர். இதெல்லாம் ஒரு புறம் இருக்க விஜய்யின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் எப்போதுமே பிரம்மாண்டமாக நடைபெறும். இதற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருப்பார்கள்.
Also Read : விஜய் ஓட சேர்ந்த நேரம் 2 சிக்கலில் மாட்டிய ராஸ்மிகா.. கிரஷ் நடிகைக்கு இப்படி ஒரு அவப்பெயரா?
ஆனால் கடந்த முறை பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா செய்ய முடியாத காரணத்தினால் சன் டிவியில் விஜய் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு பேட்டி கொடுத்திருந்தார். இந்த பேட்டியில் விஜய் இடம் நெல்சன் தான் பல கேள்விகள் கேட்டிருந்தார். ஆனால் இது இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டது.
எனவே வாரிசு படத்திலும் இதுபோன்ற ஏதும் நடந்திடக் கூடாது என மிகவும் எச்சரிக்கையாக எந்த பிரச்சனையும் இல்லாமல் விழாவை நடத்த வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளாராம். இவ்வாறு ஒவ்வொரு விஷயத்திலும் சொதப்பி வரும் வாரிசு படக்குழுவை இந்த விஷயத்தையாவது ஒழுங்கா செய்யுங்கள் என கோபத்தில் விஜய் கத்தி உள்ளாராம்.
Also Read : புதிய கீதை முதல் வாரிசு வரை.. தளபதி விஜய்யை பதம்பார்த்த 10 சம்பவங்கள்