உலக நாயகன் கமல்ஹாசன் – மணிரத்னம் இணைந்துள்ள படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நாயகன் படத்திற்குப் பின் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி படம் தக்லைஃப். இப்படத்தில் கமலுடன் இணைந்து ஜோஜு ஜார்ஜ், ஜெயம்ரவி, த்ரிஷா, சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். முன்னணி தொழில் நுட்பக் கலைஞர்கள் இதில் பணியாற்றி வருகின்றனர்.
சமீபத்தில் தக்லைஃப் பட ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் நடந்து வருகின்றது. விரைவில் இப்படத்தில் அடுத்த அப்டேட் வெளியாகும் என தெரிகிறது. இப்படம் அதிரடி ஆக்சன் படமாகவும் சமூகத்திற்கு மெசேஜ் சொல்லும் படமாக இருக்கும் என தெரிகிறது.
ஏற்கனவே இப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வந்த நிலையில், தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருவதால் இப்படம் ரிலீஸாகத் தாமதம் ஆகும் என்பதால் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளது.
தக்லைஃப் படத்தின் ரிலீஸ் தேதி
அதன்படி, தக்லைஃப் படம் அடுத்தாண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாகவும், அன்றைய தினம் மகாவீவீர் ஜெயந்தி என்பதாலும், அடுத்து வரும் சனி, ஞாயிறு விடுமுறை தினம், திங்கட்கிழமை தமிழ்ப்புத்தாண்டு தினம் என்பதால் ஐந்து நாட்கள் தொடர்விடுமுறையை முன்னிட்டு இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்தை கமல்ஹாசன், மணிரத்னம், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்து வரும் நிலையில் பணியாற்றுவதற்காக கமல், மணிரத்னம் ஆகிய ரெண்டு பேரும் சம்பளம் எதுவும் பெறவில்லை. ஆனால் இப்படத்தின் புராஃபிட் ஷேர் பெறப் போவதாகவும் தகவல் வெளியாகிறது. இவர்கள் இருவரின் சம்பளம் எனக் கணக்குப் போட்டாலே அது பெரும் தொகை வரும்.
எனவே இப்படத்தின் தொடக்கத்திற்கு எந்தத் தடையும் இருக்க கூடாது என கமல், மணிரத்னம் முடிவெடுத்து, இப்படி முடிவெடுத்துள்ளதாகவும், இப்படம் சூப்பராக வந்துள்ளதால், அவர்களின் மார்க்கெட் நிலவரத்தை விட அதிகளவு இப்படத்தின் டிஜிட்டர், சேட்டிலை, தியேட்டரிக்கல் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
கோலிவுட்டை மிரள வைக்கும் கமல்
அதேபோல் தமிழ்புத்தாண்டு பண்டிகையொட்டி இப்படம் ரிலீசாவதால், விஜய், அஜித் படங்களை தாண்இ இப்பட ஓபனிங் ரிலீஸிலும், நிச்சயம் தொடர்விடுமுறையில் வசூலிலும் சாதனை படைக்கும் , இதைப் பார்த்து விக்ரம் படத்திற்குப் பின் மொத்த கோலிவுட்டும் மிரளப் போவது நிச்சயம் என தகவல் வெளியாகிறது.