Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

1000 கோடி முதலீட்டில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்.. டாப் ஹீரோக்களின் லிஸ்ட் இதோ!

1000 கோடி முதலீட்டில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்.. டாப் ஹீரோக்களின் லிஸ்ட் இதோ!

Vels Films International : லைக்கா, சன் பிக்சர்ஸ் போன்ற பிரம்மாண்ட நிறுவனமாக வளர்ந்து வருகிறது வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல். அந்த வகையில் இந்த நிறுவனம் ஆயிரம் கோடி முதலீட்டில் பல டாப் ஹீரோக்களின் படங்களை தயாரிக்க இருக்கிறது. […]

Vels Films International : லைக்கா, சன் பிக்சர்ஸ் போன்ற பிரம்மாண்ட நிறுவனமாக வளர்ந்து வருகிறது வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல். அந்த வகையில் இந்த நிறுவனம் ஆயிரம் கோடி முதலீட்டில் பல டாப் ஹீரோக்களின் படங்களை தயாரிக்க இருக்கிறது.

இப்போது சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்தை தயாரித்து வருகிறது. இது தவிர இன்னும் சில ஹீரோக்களின் படங்களை தயாரிக்க இருக்கிறது. அதற்கான அறிவிப்பும் வெளியாக உள்ளது.

தனுஷின் 56வது படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார். கர்ணன் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இணை இருக்கிறது. வரலாற்று படமாக உருவாக உள்ளதாம்.

டாப் ஹீரோக்களின் படங்களை தயாரிக்கும் வேல்ஸ் நிறுவனம்

ரவி மோகனின் ஜீனி படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்போது மீண்டும் ரவி மோகன் படத்தை தயாரிக்க இருக்கிறது. அடுத்ததாக ஆர்யாவுடன் ஒரு படமும் கூட்டணி போட இருக்கிறது வேல்ஸ் நிறுவனம்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை தயாரிக்கும் முடிவிலும் இருக்கிறார்கள். இதற்கான இயக்குநரை விரைவில் தேர்வு செய்ய இருக்கின்றனர். ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித் கூட்டணியில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தையும் ஐசரி கணேஷ் தான் தயாரிக்கிறார்.

இப்போது இந்த நிறுவனத்தின் கீழ் 10 இயக்குனர்கள் பணியாற்ற இருக்கின்றனர். இவர்களை இணைத்து ஒரு தொகுப்பாக இன்று வேல்ஸ் நிறுவனம் ஒரு வீடியோ வெளியிட இருக்கிறது. மேலும் பெரிய ஹீரோக்களை வைத்து எடுக்கப்படும் படங்களே கிட்டத்தட்ட 1000 கோடி பட்ஜெட்டை தாண்டும் என்று கூறப்படுகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.