சிம்பு, கௌதம் மேனன் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி இருக்கும் படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தை ஐசாரி கணேஷ் தயாரித்திருந்தார். மேலும் சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார் போன்று முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏஆர் ரகுமான் இப்படத்தில் இசையமைத்திருந்தார்.
வெந்து தணிந்தது காடு படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றிருந்தது. இப்படம் சிம்பு படம் போல் இல்லாமல் வழக்கத்திற்கு மாறாக அமைந்திருந்து. அதிக பஞ்ச் டயலாக் இல்லாமல் இயல்பான முத்து என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருந்தார்.
Also Read : ஜெயம்ரவியால் விலக்கப்பட்டாரா சிம்பு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சம்பவம்
மேலும் இப்படத்தில் 19 வயது இளைஞனாக காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக தனது உடல் எடையை கடுமையான உடற்பயிற்சி மூலம் சிம்பு குறைத்தார். இந்நிலையில் படம் வெளியாகி பலரும் நேர்மையான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.
ஆனால் ஒருபுறம் கேங்ஸ்டர் கதை என்பதால் முன்னாள் வெளியான கேங்ஸடர் படங்களின் சாயல் இப்படத்தில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ஆனாலும் இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. முதல் நாளே வெந்து தணிந்தது காடு படம் 10 கோடி வசூலை பெற்றிருந்தது.
Also Read : சிம்புவுக்காக கதையையே மாற்றிய கௌதம் வாசுதேவ் மேனன்.. ஐடியாவே இல்லாமல் சுற்றிதிரிந்த STR
மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் அதிகரித்துள்ளது. அதாவது நான்கு நாட்கள் முடிவில் வெந்து தணிந்தது காடு உலகம் முழுவதும் 50.56 கோடி வசூல் வேட்டையாடி உள்ளது. யாரும் எதிர்பார்க்காத அளவு இப்படம் வசூல் செய்து வருகிறது.
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு படம் தான் சிம்புவின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயரை பெற்றிருந்தது. தற்போது வெந்து தணிந்தது காடு படம் மிகக் குறுகிய காலத்திலேயே மாநாடு வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read : சிம்பு மட்டும் இதை செய்தால் அமிதாப் பச்சன் லெவெல்க்கு வருவார்.. மனம் திறந்த கௌதம் வாசுதேவ் மேனன்