Home Tamil Movie News ஒரு வழியா டாப் குக்கு டூப் குக்கை கரை சேர்த்த வெங்கட் பட்.. விஜய் டிவி பஞ்சாயத்து, தாமு எடுக்கப்...

ஒரு வழியா டாப் குக்கு டூப் குக்கை கரை சேர்த்த வெங்கட் பட்.. விஜய் டிவி பஞ்சாயத்து, தாமு எடுக்கப் போகும் முடிவு

venkat bhatt
venkat bhatt

Venkat Bhatt and Damu: செப் வெங்கட் பட் திறமையான சமையல் கலைஞர் என்பதைவிட மற்றவர்களை ரசித்து சாப்பிட வைக்கும் அளவிற்கு சமையல் செய்து அசத்தக்கூடியவர். அப்படிப்பட்டவர் விஜய் டிவியில் கலந்து கொண்ட பிறகு தான் மக்களிடம் பிரபலமாகி அடுத்தடுத்த லெவலுக்கு முன்னேறினார். அதிலும் குக் வித் கோமாளி சீசனில் ஜட்ஜ் ஆக வந்த பிறகுதான் செப் வெங்கட் பட்டுக்கு ரசிகர்கள் பட்டாளமே கிடைத்தது.

ஆனால் அப்படிப்பட்டவர் இந்த முறை ஆரம்பித்த சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து விலகி சன் டிவியில் டாப்பு குக் டூப் குக் நிகழ்ச்சிக்கு ஜட்ஜ் ஆக போனார். ஆரம்பத்தில் இதற்கு சில விமர்சனங்கள் வந்தாலும் அதற்கு பதில் அளிக்கும் விதமாக வெங்கட் பட் சொன்ன ஒரே விஷயம் நான் இந்த அளவுக்கு பேரும் புகழும் அடைந்ததற்கு ஒருவித காரணம் மீடியா மேசன் தான்.

கடந்த பிக் பாஸ் சீசன் போல் அமைந்த குக் வித்து கோமாளி சீசன் 5

இவருக்கும் விஜய் டிவிக்கும் சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டு தனியாக போகும் நிலையில் சன் டிவி மூலம் டாப்பு குக் டூப்பு குக் நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்கு பிளான் பண்ணி இருந்தார். அப்பொழுது என்னிடம் ஜட்ஜ் ஆக வரவேண்டும் என்று கேட்ட நிலையில் அவருக்கு நான் நன்றி செலுத்த வேண்டும் என்ற என்னுடைய கடமையை காட்டும் விதமாகத்தான் நான் சன் டிவிக்கு போனேன்.

அதே மாதிரி தாமுவும் வருவதாக சொல்லி இருந்தார். ஆனால் விஜய் டிவி சேனலிடம் இருந்து தாமுவிடம் தனிப்பட்ட முறையில் பேசி சமரசம் செய்ததால் தாமு சன் டிவிக்கு வராமல் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜட்ஜ் மறுபடியும் தொடர்ந்து நடத்தி வருகிறார் என்று பதில் அளித்து இருந்தார். அந்த வகையில் டாப்பு குக் டூப்பு குக் நிகழ்ச்சியா அல்லது குக் வித் கோமாளியா? இதில் எது வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது பிரியங்கா மற்றும் மணிமேகலை சண்டையால் விஜய் டிவிக்கு எதிராக பலரும் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அதோடு மட்டுமில்லாமல் விஜய் டிவி டிஆர்பிக்காக பிரியங்காவை தலையில் தூக்கி வைத்து ஆடி வருகிறார்கள். அதனால் எங்களுடைய சப்போர்ட் மணிமேகலைக்கு தான் என்று ஆதரவு கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இப்படி விஜய் டிவிக்கு எதிர்மறையான கருத்துக்கள் வரும் நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிதும் மக்களிடத்தில் அடி வாங்கிவிட்டது.

இதனை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப்பு குக் டூப்பு குக் நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஆரம்பித்த வெங்கட் பட் தற்போது ஒரு வழியாக கரை சேர்க்கும் விதமாக பைனலுக்கு கொண்டு வந்து விட்டார். அந்த வகையில் நரேந்திர பிரசாத் மற்றும் சுவாமிநாதன் பைனலாக தேர்வாகியிருக்கிறார்கள். இவர்களுடன் சேர்ந்து சைத்ரா ரெட்டி மற்றும் சுஜாதா இவர்களும் பைனலுக்கு போயிருக்கிறார்கள்.

இவர்களில் யார் ஜெயிப்பார்கள் என்று கடும் போட்டியில் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் விஜய் டிவியில் ஏற்பட்ட குழப்பத்தினால் செப் தாமு இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக பயணிக்க கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அதனால் எடுத்த கையோடு இந்த சீசனை முடித்துவிட்டு விஜய் டிவிக்கு குட்பாய் சொல்லிவிட்டு போய்விடலாம் என தோன்றியிருக்கும். ஏனென்றால் இந்த சீசனில் பிரியங்கா போட்டியாளருக்கு மட்டுமில்லாமல் ஜட்ஜ்க்கும் மிகப்பெரிய தொந்தரவை கொடுத்திருக்கிறார்.

அதனால் இனி அடுத்த வருடம் குக் வித்து கோமாளி நிகழ்ச்சி தொடங்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அப்படியே தொடங்கினாலும் ஜட்ஜ் ஆக செஃப் தாமு வருவது இனி சந்தேகம் தான். இதே மாதிரி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கடந்த சீசனில் கமலால் ஏற்பட்ட குளறுபடியை சரிக்கட்டும் விதமாக இந்த முறை விஜய் சேதுபதியை தொகுத்து வழங்க விஜய் டிவி ஏற்பாடு பண்ணி இருக்கிறது.

அதே மாதிரி ஒருவேளை அடுத்தாண்டு குக் வித்து கோமாளி நிகழ்ச்சிக்கு புதிதாக இரண்டு ஜட்ஜ்களை கொண்டுட்டு வந்து அரங்கேற்றலாம் அதற்கு வாய்ப்பு இருக்கிறது.