வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பிட்டு படம் ரேஞ்சுக்கு களமிறங்கிய வெங்கட் பிரபு..

மாநாடு திரைப்படத்தின் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்த வெங்கட் பிரபு தற்போது இயக்கியுள்ள திரைப்படம் மன்மத லீலை. அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் போன்ற ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

படத்தின் பெயரே விவகாரமாக இருப்பதால் நிச்சயம் படத்தில் அப்படி இப்படி என்ற காட்சிகள் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக ஒரு வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

நேற்று சிம்பு மன்மதலீலை திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவை பார்த்த பலரும் வெங்கட் பிரபுவை கேவலமாக கழுவி ஊற்றி வருகின்றனர். ஏனென்றால் அந்த வீடியோ முழுவதும் லிப் லாக் காட்சிகள் மட்டுமே இருக்கிறது.

வெங்கட்பிரபு ஏன் இப்படி இறங்கிவிட்டார் என்றும், இப்படி ஒரு படம் தேவையா என்றும் அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாநாடு படத்தின் மாபெரும் வெற்றியால் வெங்கட் பிரபுவுக்கு தற்போது திரையுலகில் நல்ல மதிப்பு இருக்கிறது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாநாடு படத்தை பார்த்துவிட்டு வெங்கட் பிரபுவிடம் அவருக்கு ஒரு கதை தயார் செய்யும்படி கேட்டு இருக்கிறார். இந்த நிலையில் இப்படி ஒரு கேவலமான பிட்டு பட ரேஞ்சுக்கு ஒரு படத்தை அவர் எடுத்து இருப்பது நிச்சயம் அவருடைய சினிமா வாழ்வை பாதிக்கும்.

இந்த படத்தின் மூலம் அவர் மக்களுக்கு என்ன கருத்து சொல்லப் போகிறார். இப்படி ஒரு கேவலமான காட்சியே மொத்த படமும் எப்படி இருக்கும் என்பதை நமக்குச் சொல்லிவிடுகிறது. முன்பெல்லாம் இதுபோன்ற காட்சிகள் டிவியில் வந்தால் உடனே அனைவரும் சேனலை மாற்றி விடுவார்கள்.

ஆனால் இப்போது மொத்த படமும் இப்படி தான் இருக்கும் என்றால் இந்த படத்தை யாரால் பார்க்க முடியும். ஒருவேளை வெங்கட் பிரபு ஃபேமிலி ஆடியன்ஸ் வேண்டாம் என்று நினைக்கிறாரோ என்னவோ அது அவருக்குத்தான் தெரியும்.

Trending News