திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தளபதி 68 படத்தின் கதை இதுதான்.. 2 நிமிட வீடியோவில் மொத்தத்தையும் காட்டிய வெங்கட் பிரபு

Thalapathy 68: தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்னும் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டுமே மீதம் இருப்பதால் ஒரு சில தினத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து, அடுத்ததாக விஜய் தளபதி 68 படத்தில் இணையப் போகிறார்.

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய் தனது 68வது படத்தில் நடிப்பதாக சமீபத்தில் 2 நிமிட வீடியோவை வெளியிட்டு அதில் ஒட்டுமொத்த படக்குழுவை பற்றியும் தெரிவித்திருந்தனர். பஸ்ஸில் (puzzle) போன்ற வடிவில் பச்சை நிற இங்கில் படக்குழுவினரை வட்டமிட்டு காண்பித்தனர். இந்த 2 நிமிட வீடியோவின் மூலமே தளபதி 68 படத்தின் கதை இப்படி தான் இருக்கும் என்பதை வெங்கட் பிரபு அவிழ்த்து விட்டிருக்கிறார்.

Also Read: சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி தடுக்கிறாரே! லியோவால் வெங்கட் பிரபுவுக்கு ஏற்பட்ட தலைவலி

இந்த வீடியோவில் துப்பறிவாளர்கள் பயன்படுத்தும் பூதக்கண்ணாடியை காண்பித்துள்ளனர். விஜய் டிடெக்டிவ் சம்பந்தமான ஒரு விஷயத்தையோ அல்லது ஒரு பெரிய பிரச்சனையோ, சமூகத்திற்கு தெரியாத ஒரு சம்பவத்தையோ அல்லது யாரும் தொடுவதற்கு பயப்படக்கூடிய ஒரு விஷயத்தை இந்த படத்தில் தளபதி பூதக்கண்ணாடி வைத்து கண்டுபிடித்து வெளியிடுகிறார். அதன் பிறகு என்ன சர்ச்சைகள் சம்பவங்கள் ஏற்படுகிறது என்பதுதான் தளபதி 68 படத்தின் கதையின் கட்டமைப்பு இருக்கப் போகிறது.

அதேபோல தளபதி 68 படத்தின் அறிவிப்பை வெளியிட்ட வீடியோ, முதலில் ஒன்று முதல் ஐந்து கவுண்டவுனில் துவங்கப்பட்டிருக்கும், அதேபோல ஓரத்தில் ஒரு கடிகாரமும் இடம்பெற்றிருக்கும். ஏற்கனவே வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் டைம் லூப்பை வைத்து எடுத்ததன் மூலம் அதில் கில்லாடியாக மாறிவிட்டார். இதனால் தளபதி 68 படம் முழுவதும் டைம் லூப்பாக இல்லாவிட்டாலும், ஏதாவது ஒரு முக்கியமான இடத்தில் டைம் லூப் விஷயத்தை இணைத்து படத்தை எடுக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். இது விஜய்க்கும் பிடித்திருக்கிறது.

Also Read: பிரம்மாண்டத்தின் உச்சம் தொட்ட லோகேஷ்.. விஜய்க்கு நிகராக ஆட்டம் போட்ட ஹீரோயின்

மேலும் இந்த பஸ்ஸிலில் ஜூனியர் என்டிஆர் மற்றும் பிரபல ஹாலிவுட் நடிகை பெட்டி ஒயிட் பெயர்களும் இடம் பெற்றிருக்கிறது. நடிகை பெட்டி ஒயிட் தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக மாறியவர். இவர் ஏற்கனவே டிடெக்டிவ் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். தளபதி 68 படத்தின் கதை டிடெக்டிவ் சம்பந்தப்பட்ட கதையுடன் கனெக்ட் செய்வதால் டைம் லூப்பில் ஹாலிவுட் நடிகையை வெங்கட் பிரபு கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மேலும் பஸ்ஸிலில் ஜூனியர் என்டிஆர் பெயரும் இடம் பெற்றது. அவரும் இந்த படத்தில் கேமெியோ கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு 2 நிமிட வீடியோவை வைத்து தளபதி 68 படத்தில் வெங்கட் பிரபுவும் விஜய்யும் தரமான சம்பவத்தை செய்திருக்கின்றனர். இப்போதைய சூழலில் லியோ படத்தை விட தளபதி 68 படத்தின் மீதான எதிர்பார்ப்பு தான் ரசிகர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே தென்படுகிறது.

Also Read: அரசியலில் பதம் பார்க்க லியோவை பகடைக்காயாக யூஸ் பண்ணும் விஜய்.. வாயடைத்து போய் நிற்கும் லோகேஷ்

Trending News