
கோட் படத்துக்கு பிறகு வெங்கட் பிரபு என்ன ஆனார் என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. தினமும் சோசியல் மீடியாவில் தலை காட்டும் அவர் இப்பொழுது அடுத்த படத்தை தேடி அலைந்து கொண்டு இருக்கிறார். இப்பொழுது மனுஷன் நிலைமையை கேள்விப்பட்டால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளிவந்த கோட் படத்தின், எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் வெங்கட் பிரபு தலை காட்டவில்லை. படம் முடிந்த கையோடு இந்த ப்ராஜெக்டில் இருந்து வெளிவந்து விட்டேன் என வெங்கட் பிரபு ஒரு கேட்டை போட்டு விட்டாராம். அதனால் வெற்றி கொண்டாட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.
அதன் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கப் போவதாக கூறி வந்த நிலையில் இப்பொழுது அந்த படமும் நிலுவையில் தான் இருக்கிறதாம். கோட் படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபுவை, சிவகார்த்திகேயன் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டாராம். 2026க்கு அப்புறம் படம் பண்ணலாம் என கூறிவிட்டாராம்.
இதனால் கைவசம் எந்த படமும் இல்லாததால் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயனின் நண்பரான மாவீரன் படம் எடுத்த மடோன் அஸ்வினை தாஜா செய்து வருகிறாராம். அவரது ஆபீஸிற்கு வாரம் இருமுறை சென்று சிவகார்த்திகேயனை தனக்கு படம் பண்ண சொல்லுமாறு கேட்டுவருகிறாராம்.
அமரன் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் மதராசி, பராசக்தி என அடுத்தடுத்த பெரிய பெரிய ப்ராஜெக்ட்களில் நடித்து வருகிறார். இதனால் அவர் வெங்கட் பிரபுவிற்கு கால் சீட் கொடுப்பாரா என்று தெரியவில்லை. ஏற்கனவே கோட் பட நேரத்தில் சிவகார்த்திகேயன் அவரை தாங்கி வந்தார் ஆனால் இப்பொழுது இழுத்தடித்து வருகிறார்.