வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

சன் டிவிக்கு போன வெங்கடேஷ் பட்.. விஜய் டிவியில் இருந்த விலக காரணம்

Venkatesh Bhat : விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான சீசன் 5 நேற்றைய தினம் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா, விடிவி கணேஷ், தொகுப்பாளினி பிரியங்கா ஆகியோர் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் தான் கடந்த சீசன்களில் நடுவராக இருந்து வந்தனர். சீசன் 5 நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்-க்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களம் இறங்கி இருக்கிறார்.

வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெறும் போது நிறைய விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக புகழ் போன்ற சில கோமாளிகளை வெங்கடேஷ் பட் அடிபதாக சர்ச்சையும் கிளம்பியது. இது எல்லாமே நிகழ்ச்சிக்காக தான் என ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

சன் டிவியில் கலக்கும் வெங்கடேஷ் பட்

இதை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என வெங்கடேஷ் பட் ஒரு பதிவும் போட்டிருந்தார். இதற்கு பதிலாக வேறு ஒரு வாய்ப்பு வந்துள்ளதாகவும் அதை விரைவில் உங்களுடன் பகிர்வேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதன்படி விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பான நிலையில் சன் டிவியில் புதிய சமையல் நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் கலந்து கொள்ள இருப்பதற்கான ப்ரோமோ இன்று வெளியாகிறது.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்டை மிஸ் செய்யும் போட்டியாளர்கள் சன் டிவியில் இந்த புதிய சமையல் நிகழ்ச்சி மூலம் அவரை பார்க்கலாம். இந்நிகழ்ச்சி குக் வித் கோமாளி சீசன் 5யை ஓவர் டேக் செய்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News