திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தமிழ் சினிமாவில் தில்லான 7 நடிகைகள்.. ஹோட்டலை உண்டு இல்லை என பண்ணிய திரிஷா

தமிழ் சினிமாவில் அழகு பதுமைகளாக வரும் நடிகைகள் பலரும் ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அவர்கள் ஹீரோயின்களாக வெறும் பாடல் காட்சிகளுக்கு மட்டும் வந்து போகாமல் நடிப்புக்கு தீனி போடும் கேரக்டர்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். அந்த வகையில் நிஜ வாழ்விலும் மிகவும் தைரியமாக அநியாயத்துக்கு எதிராக சில நடிகைகள் போராடி இருக்கின்றனர். அதில் மிகவும் தில்லான 7 நடிகைகள் யார் என்பது பற்றி இங்கு காண்போம்.

திரிஷா: பல வருடங்களாக தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருப்பவர் நடிகை திரிஷா. இவருக்கு தனிப்பட்ட வாழ்வில் ஏகப்பட்ட பிரச்சனைகளும், சர்ச்சைகளும் ஏற்பட்டது உண்டு. ஆனால் அவர் தைரியமாக அதை தகர்த்தெறிந்து வருகிறார்.

உதாரணமாக சில வருடங்களுக்கு முன்பு இவர் குளிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் திரிஷா அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் அதற்கு காரணமாக இருந்த ஹோட்டலை உண்டு இல்லை என்று பண்ணினார். மேலும் அந்த ஹோட்டலுக்கு எதிராக வழக்கு போட்டு அதை உடைத்தெறிந்தார்.

ஸ்ரீ ரெட்டி: தெலுங்கு நடிகையான இவர் தனக்கு நடந்த அநியாயத்திற்கு எதிராக அரை நிர்வாணமாக குரல் கொடுத்தார். பட வாய்ப்புகள் கொடுக்கிறேன் என்ற பெயரில் இவரை ஏமாற்றிய பல பிரபலங்களின் முகத்திரையையும் இவர் தைரியமாக கிழித்தெறிந்தார்.

சோனா: தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் பாடகர் எஸ் பி பி சரண் மீது ஒரு புகார் கொடுத்தார். அதாவது அவர் சோனாவுக்கு பாலியல் ரீதயாக தொல்லை கொடுத்ததாக அவர் தைரியமாக மீடியாவிற்கு அறிவித்தார். இந்த விவகாரம் அப்போது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

ராதிகா: சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் மிகவும் தைரியமான பெண்மணியாக வலம் வரும் ராதிகா, பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதனை அடிக்கச் சென்றார். யூடியூப் சேனல்களில் நடிகைகளை பற்றி மிகவும் மோசமாக பேசி வருபவர் பயில்வான் ரங்கநாதன்.

அந்த வகையில் இவர் ராதிகாவின் குடும்பத்தை பற்றியும் மிகவும் மோசமாக பேசியிருந்தார். இதனால் அவர் பெசன்ட் நகர் பீச்சில் வைத்து தன் அம்மாவை பற்றி தப்பாக பேசிய பயில்வானை அடிக்கச் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

கஸ்தூரி: 80 காலகட்ட சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். வக்கீலுக்கு படித்திருக்கும் இவர் அநியாயத்துக்கு எதிராக தைரியமாக குரல் கொடுக்கக் கூடியவர். அந்த வகையில் இவர் பல சர்ச்சைகளையும், பிரச்சினைகளையும் சந்தித்து இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து அவர் தைரியமாக பல பிரச்சனைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.

வனிதா விஜயகுமார்: இவர் யார் என்ன சொன்னாலும் என்னுடைய வாழ்க்கையை நான் என் இஷ்டப்படி வாழ்வேன் என்று தைரியமாக பேசக்கூடியவர். அந்த வகையில் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பல விமர்சனங்கள் இருந்தது.

ஆனாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத வனிதா நான் இப்படித்தான் என்று அடம் பிடித்து வாழ்ந்து வருகிறார். மேலும் இவர் வாய் துடுக்காக பேசி பல பிரச்சனைகளில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

பாவனா: மலையாள நடிகையான இவர் தமிழிலும் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு நடந்த பாலியல் தொல்லை ஒட்டுமொத்த சினிமாவையும் கலங்கடித்தது. இவருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்தனர்.

இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதே என்று வீட்டிலேயே முடங்காமல் இவர் தைரியமாக அதற்கு காரணமான திலீப் மீது புகார் கொடுத்தார். அதன் பிறகு காவல்துறை அந்த நடிகரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Trending News