வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கிட்டி கிருஷ்ணமூர்த்தி கலக்கிய 5 படங்கள்.. கமல், ரஜினியை ஓடவிட்ட பழைய டிஐஜி தினகர்

கிட்டி கிருஷ்ணமூர்த்தி இயக்குனர் மற்றும் எழுத்தாளராக இருந்தவர். சரத்குமார் நடித்த தசரதன் திரைப்படத்தை இயக்கியவர் இவர்தான். தமிழ்,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களில் பணியாற்றி இருக்கிறார். இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்த நாயகன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கவும் தொடங்கினார். வில்லன் கேரக்டரில் பயங்கரமாக கலக்கக் கூடிய நடிகர் இவர்.

சத்யா: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமலஹாசன் தயாரித்து, நடித்த திரைப்படம் சத்யா. இந்த படத்தில் கிட்டி தண்டபாணி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படத்தின் கிளைமாக்ஸ் முன்பு வரை இவர் கமலுக்கு உதவும் நல்லவர் போல் தான் தெரியும். அதன் பின்னர் தன்னுடைய அசுரத்தனமான வில்லதனத்தை காட்டி இருப்பார். இந்த படத்தில் கிட்டிக்கு பின்னணி குரல் கொடுத்தது பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம்.

Also Read:நடிகர் திலகத்தை தேசிய விருது வாங்காமல் தடுத்த உலகநாயகன்.. காரணத்தை கூறி நெகிழ வைத்த சம்பவம்

சூரசம்ஹாரம்: சித்ரா லட்சுமணன் இயக்கத்தில், வியட்நாம் வீடு சுந்தரம் திரைக்கதை எழுதி, உலகநாயகன் கமலஹாசன் நடித்த படம் சூரசம்காரம். இந்த படத்தில் கமலுடன் நிழல்கள் ரவி, நிரோஷா, பல்லவி ஆகியோர் நடித்திருக்கின்றனர். கிட்டி கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தில் போதை பொருள் கடத்தும் உலகின் தாதாவாக, மோகன்தாஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ராஜா சின்ன ரோஜா: இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ராஜா சின்ன ரோஜா. இந்த படத்தில் ரகுவரன் ரஜினிக்கு வில்லனாகவும் போதைப்பொருள் கடத்துபவராகவும் நடித்திருப்பார். அதில் கிருஷ்ணமூர்த்தி முழுக்க முழுக்க ரகுவரன் உடன் வரும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பார்.

Also Read:லியோ படத்தில் கண்டிப்பாக கமலஹாசன்.. சர்ப்ரைஸாக கொடுக்க இயக்குனர் போட்ட பிளான்.!

துர்கா: இயக்குனர் ராமநாராயணன் இயக்கத்தில் கனகா,நிழல்கள் ரவி, பேபி ஷாமிலி ஆகியோர் நடித்த திரைப்படம் துர்கா. இதில் கிட்டி கிருஷ்ணமூர்த்தி சொத்தின் மேல் ஆசைப்பட்டு தன்னுடைய உறவுக்கார பெண்ணான துர்காவை கொலை செய்ய பயங்கரமாக முயற்சி செய்வார். இதில் தன்னுடைய வில்லத்தனத்தால் மிரட்டி இருப்பார்.

அன்பு கட்டளை: இயக்குனர் யார் கண்ணன் இயக்கத்தில் ராமராஜன், பல்லவி, கே ஆர் விஜயா, கவுண்டமணி மற்றும் செந்தில் நடித்த திரைப்படம் அன்பு கட்டளை. 1989 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த படத்தில் கிட்டு கிருஷ்ணமூர்த்தி வில்லனாக நடித்திருப்பார். மேலும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

Also Read:ரஜினி படத்தை தயாரிக்க போட்டிப் போடும் முதலாளிகள்… எவ்வளவு வேணாலும் சம்பளம் தர நாங்க ரெடி என்கிட்ட கொடுங்க!

Trending News