புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பத்மஸ்ரீ விருது வாங்கிய ஒரே வாரத்தில் சோகம்.. வாணி ஜெயராம் குரலில் மறக்க முடியாத 10 பாடல்கள்

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என இந்திய மொழிகளில் 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். 1970ல் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய இவருக்கு இந்த வருடத்திற்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவர் தன்னுடைய நுங்கம்பாக்கம் வீட்டில் படுக்கையிலிருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு மரணமடைந்து இருக்கிறார். இவருடைய குரலில் என்றும் நினைவில் நீங்காத நிறைய பாடல்கள் இருக்கின்றன.

“மல்லிகை என் மன்னன்”: 1973 ஆம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி திரைப்படத்தில். ‘மெல்லிசை மன்னர்’ எம் எஸ் விஸ்வநாதன் இசையில், வாலி எழுத்தில் இவர் பாடியது தான் “மல்லிகை என் மன்னன்” என்னும் பாடலை தன்னுடைய மெல்லிய குரலில் பாடியிருக்கிறார்.

“ஒரே நாள் உன்னை நான்”: 1977 ஆம் ஆண்டு இளையாராஜா இசையில் பஞ்சு அருணாச்சலம் வரிகளில் வாணி ஜெயராம் “ஒரே நாள் உன்னை நான்” பாடலை பாடியிருந்தார்.

“ஏபிசி நீ வாசி”: 1985 ஆம் ஆண்டு கமலஹாசன், ராதா, ரேவதி நடிப்பில் வெளியான ஒரு கைதியின் டைரி திரைப்படத்தில் ஏபிசி நீ வாசி பாடலை வாணி ஜெயராம், எஸ் பி பாலசுப்ரமணியத்துடன் சேர்ந்து பாடியிருந்தார்.

Also Read: 68 வயதில் செய்யக்கூடாததை செய்யும் கமல்.. படாதபாடு பட்டதால் வந்த வினை

“கவிதை கேளுங்கள்”: 1986ல் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்த புன்னகை மன்னன் திரைப்படத்தில் கவிதை கேளுங்கள் என்னும் கடினமான பாடலை பாடியிருந்தார்.

“மாருகோ மாருகோ”: கமலஹாசன், பிரபு, குஷ்பு, அமலா நடித்த வெற்றி விழா படத்தில் “மாருகோ மாருகோ” என்னும் ஜாலியான பாடலை பாடியிருந்தார்.

“பூமாலை”: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘மூன்று முகம்’ திரைப்படத்தில் வாணி ஜெயராம் பாடிய “பூமாலை” பாடல் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.

Also Read: வாழ வைத்த தெய்வங்களை வாட்டி வதைக்க முடிவு எடுத்து இருக்கிறாரா ரஜினி.. இளையராஜா போல் மாறிய சூப்பர் ஸ்டார்

“மழை கால மேகம்”: கமலஹாசன், ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான வாழ்வே மாயம் திரைப்படம் வெள்ளிவிழா கண்டது. இந்த படத்தில் வாணி ஜெயராம் “மழை கால மேகம்” என்னும் பாடலை எஸ்பிபி யுடன் இணைந்து பாடியிருந்தார்.

“ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்”: கமலஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் வெளியான நீயா திரைப்படத்தில் “ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்” என்னும் பாடலை வாணி ஜெயராம் பாடியிருந்தார்.

“என் உள்ளே எங்கும்”: சிவகுமார் நடிப்பில் வெளியான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ திரைப்படம் எதார்த்தமான கதைக்களத்தில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் “என் உள்ளே எங்கும்”பாடல் வாணி ஜெயராமுக்கு நிறைய விருதுகளை வாங்கி கொடுத்தது.

“நித்தம் நித்தம் நெல்லு சோறு”: இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியியான ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தில் ‘படாபட்’ ஜெயலட்சுமிக்கு இவர் பாடிய “நித்தம் நித்தம் நெல்லு சோறு” பாடலை வாணி ஜெயராம் பாடியிருந்தார்.

Also Read: சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்டா மட்டும் போதாது.. ரஜினி எடுத்த துணிச்சலான முடிவு, தயக்கம் காட்டிய விஜய்

Trending News