Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

வடசென்னை 2 ஷூட்டிங்கை தொடங்கிய வெற்றிமாறன்.. நெல்சன் அங்க என்ன பண்றாரு!

வடசென்னை 2 ஷூட்டிங்கை தொடங்கிய வெற்றிமாறன்.. நெல்சன் அங்க என்ன பண்றாரு!

Simbu : வெற்றிமாறன், சிம்பு கூட்டணியில் படத்தின் படப்பிடிப்பு இப்போது தொடங்கி இருக்கிறது. அதாவது திடீரென எதிர்பார்க்காத இந்த கூட்டணி விறுவிறுப்பாக படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. வெற்றிமாறன் விடுதலை மற்றும் விடுதலை 2 படத்தை முடித்து வெற்றி கண்டார். அடுத்ததாக […]

Simbu : வெற்றிமாறன், சிம்பு கூட்டணியில் படத்தின் படப்பிடிப்பு இப்போது தொடங்கி இருக்கிறது. அதாவது திடீரென எதிர்பார்க்காத இந்த கூட்டணி விறுவிறுப்பாக படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. வெற்றிமாறன் விடுதலை மற்றும் விடுதலை 2 படத்தை முடித்து வெற்றி கண்டார்.

அடுத்ததாக தனுஷை வைத்து வடசென்னை 2 படத்தை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிம்புவை வைத்து இப்போது வடசென்னை 2 படத்தை எடுத்து வருகிறார். அந்த புகைப்படம் இன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.

அதுவும் சிம்பு அந்த புகைப்படத்தில் வேஷ்டி மற்றும் கைலி உடன் இருக்கிறார். இந்த புகைப்படத்தில் வெற்றிமாறன் உள்ள நிலையில் இயக்குனர் நெல்சனும் இருக்கிறார். அதுவும் கையில் குடையை பிடித்துக் கொண்டு இருக்கிறார்.

வடசென்னை 2 ஷூட்டிங்கை தொடங்கிய வெற்றிமாறன்

இதைப் பார்த்த பலரும் நெல்சன் அங்கு என்ன செய்கிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். ஒருவேளை இந்த படத்தில் நெல்சனும் நடிக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இப்போது அவர் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

இப்படி இருக்கையில் வடசென்னை 2 படப்பிடிப்பில் அவருக்கு என்ன வேலை என்ற கேள்விதான் எழுந்திருக்கிறது. இப்போது வெற்றிமாறன் படப்பிடிப்பில் சிம்பு நடிப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த படம் வடசென்னை 2வாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் இப்போது சிம்புவின் கெட்டப்பை பார்க்கும்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேலும் படத்தில் நடிக்கும் அடுத்த அடுத்த பிரபலங்களை பற்றிய தகவல் விரைவில் வெளியாகும்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.