வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வெற்றிமாறனின் முதல் படம் பொல்லாதவன் இல்லையாம்.. ரகசியத்தை உடைத்த ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் தற்போது பல இயக்குனர்களும் தங்கள் திறமையை காட்டி ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் பல எதார்த்தமான படைப்புகளை ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் கொடுத்து இன்று முன்னணி இயக்குனர் வரிசையில் இருப்பவர் வெற்றிமாறன்.

தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கி குவித்திருக்கும் இவருடைய இயக்கத்தில் நடிப்பதற்கு பல நடிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது இவர் விடுதலை, வாடிவாசல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக இருக்கிறார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவிற்கு பொல்லாதவன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைதொடர்ந்து இவர் இயக்கிய ஆடுகளம், அசுரன், வடச்சென்னை போன்ற பல திரைப்படங்கள் ஏகப்பட்ட விருதுகளை வாங்கி குவித்தது. இவ்வளவு சிறப்புகளை பெற்ற இவரை பற்றி நடிகை ஆண்ட்ரியா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நாம் அனைவரும் வெற்றிமாறனுக்கு முதல் திரைப்படம் பொல்லாதவன் தான் என்று நினைத்து இருந்தோம். ஆனால் நடிகை ஆண்ட்ரியா அவருக்கு முதல் படம் அது கிடையாது என்று பலநாள் ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார். இவர் காலேஜில் படித்துக்கொண்டு இருந்த பொழுது வெற்றிமாறன் அவரிடம் ஒரு கதையைக் கூறியிருக்கிறார்.

ஆனால் ஆண்ட்ரியா அப்போது நடிப்பின் மீது ஆர்வம் இல்லாத காரணத்தினால் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு வெற்றிமாறன் அந்தக் கதையை எடுக்காமல் பொல்லாதவன் திரைப்படத்தின் கதையை தனுஷை வைத்து இயக்கியிருக்கிறார்.

பின்னர் தன்னுடைய படிப்பை முடித்த ஆண்ட்ரியா சில காரணங்களால் நடிகையாக மாறினார். அப்போது வெற்றிமாறன் ஆடுகளம் திரைப்படத்தில் அவரை டப்பிங் குரல் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு சம்மதித்த ஆண்ட்ரியாவும் அந்த படத்தில் டாப்ஸிக்கு டப்பிங் பேசினார். அந்த நட்பின் அடிப்படையில் வடச்சென்னை திரைப்படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.

Trending News