திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மாஸ் ஹீரோவை சந்தித்து ஒன் லைன் ஸ்டோரி கூறிய வெற்றிமாறன்.. செம கடுப்பில் தனுஷ்

நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் திரைப்படங்களுக்கு பிறகு தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரியின் இயக்கத்தில் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி அன்று தியேட்டர்களில் தமிழிலும், தெலுங்கிலும் ரிலீஸ் ஆகிறது.

தனுஷை பொறுத்த வரைக்கும் ஆரம்ப கால சினிமாவில் அவரை கவனித்தால் நம் பக்கத்து வீட்டு பையன் போல் தான் இருப்பார். அதேபோல் அவர் நடித்த கதைகளும் காதல் மற்றும் காமெடி நிறைந்ததாகவே இருக்கும். இந்த பிம்பத்தை உடைத்து நடிகர் தனுஷை ஆக்சன் ஹீரோவாக நம் கண்முன் காட்டியவர் தான் இயக்குனர் வெற்றிமாறன்.

Also Read: குருவுடன் மோதும் தனுஷ்.. வாத்தி உங்க புத்தியை காமிச்சிட்டிங்களா

தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணி எப்போதுமே வெற்றி கூட்டணி தான். தனுஷை ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்தியவர் வெற்றிமாறன். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் திரைப்படத்திற்காக தான் அவருக்கு தேசிய விருது கிடைத்தது. மேலும் வெற்றி இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் தனுஷின் சினிமா வாழ்க்கையின் மணிமகுடம் என்றே சொல்லலாம்.

நடிகர் தனுஷ் இப்போது பயங்கர பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்த இரண்டு வருடத்திற்கு தனுஷிடம் கால்ஷீட்டே இல்லை. அடுத்தடுத்து படங்களை ஒப்புக்கொண்ட தனுஷ் வெற்றிமாறனின் வடசென்னை இரண்டாம் பாகத்தை டீலில் விட்டுவிட்டார். வெற்றிமாறனும் தனுஷை பயங்கரமாக கடுப்பேத்தும் படி ஒரு வேலையில் இறங்கி இருக்கிறார்.

Also Read: அப்ப அது வதந்தி இல்லையா உண்மைதானா.. பல கோடி வியாபாரமான கேப்டன் மில்லருக்கு வந்த சோதனை

தனுஷின் ஆஸ்தான இயக்குனராக இருந்த வெற்றிமாறன், சினிமாவில் தனுஷை ஒரு எதிரியாக பார்க்கும் சிம்புவை வைத்து படம் பண்ண இருக்கிறார். இது யாருமே எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட். சிம்புவிடம் அழகான ஒரு கேங்ஸ்டர் ஸ்டோரியின் ஒன் லைனை சொல்லி இருக்கிறார் வெற்றி. சிம்புவும் இந்த கதைக்கு ஓகே சொல்லிவிட்டாராம்.

மேலும் ஒரு நல்ல கேங்ஸ்டர் ஸ்டோரியை பண்ண வேண்டும் என்று இயக்கிய வடசென்னையில் அது மிஸ் ஆகவே விட்டதை சிம்புவின் படத்தில் பிடித்து விட வேண்டும் என்று வேறு வெற்றிமாறன் முடிவெடுத்து இருக்கிறாராம் . நடிகர் தனுஷ் சினிமாவில் ரொம்பவும் நம்பும் வெற்றிமாறன் இப்படி செய்திருப்பது தனுசுக்கு பயங்கர கடுப்பான விஷயமாக இருக்கிறது.

Also Read: தனுஷின் சூப்பர்ஹிட் படத்தை மிஸ் பண்ண பாய்ஸ் பட நடிகர் .. இப்போ புலம்பி என்ன பிரயோஜனம்

Trending News