வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூர்யா வரலனா கூட அந்த ஹீரோவை வைத்து வாடிவாசல் முடிப்பேன்.. 100% உறுதியாக இருக்கும் வெற்றிமாறன்

Vetrimaran 100% confident in taking Vaadivasal without suriya: அமீர் பருத்திவீரன் பிரச்சனை சாதாரணமாக ஆரம்பித்து மிகப்பெரிய பூதாகரமாக இன்று வரை பேசப்பட்ட வருகிறது. இதில் அமீர் பாதித்தாரோ இல்லையோ ஆனால் சம்பந்தமே இல்லாமல் வெற்றிமாறன் பாதிக்கப்பட்டு விட்டார். அவர் வருத்தப்படவில்லை இருந்தாலும் வாடிவாசல் படத்திற்கு இந்த பிரச்சனை வரும் என்று அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

அனைவரும் எதிர்பார்த்த இந்த படம் எப்பொழுது தொடங்கும் என்று நினைக்கும் பொழுது திடீரென பருத்தி வீரன் பிரச்சனையில் சூர்யா இந்த படத்தில் நடிக்க மறுத்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் நடிக்க இருப்பதால். இந்த படத்தில் இருந்து அமீரை நீக்குவதற்கு சூர்யா எவ்வளவோ முயன்றார். ஆனால் வெற்றிமாறன் சூர்யாவை விட இந்த படத்திற்கு அமிர்தான் முக்கியம் என்று உறுதியாக கூறிவிட்டார்.

சூர்யா இந்த படத்தை பற்றி கவலைப்படாமல் அவர் அவர் வேலையை நன்றாக செய்து வருகிறார். வெற்றி மாறனும் வருத்தத்தில் இல்லை. இந்த விஷயம் நடக்கும் பொழுது திடீரென வெற்றிமாறனுக்கு அஜித்துடன் இணைய வாய்ப்பு கிடைத்தது உறுதியானது. அதனால் இந்த படத்தில் அஜித்தை நடிக்க வைக்கலாம் என்ற கோணத்திலும் வெற்றிமாறன் ஆசைப்பட்டார்.

Also Read: சூர்யாவை விட பெரிய மனசு என நிரூபித்து காட்டிய அமீர்.. மிக்ஜாம் புயலுக்கு வாரி வழங்கிய ராஜன்

ஆனால் அஜித் இது சூர்யா படம் சூர்யா தான் நடிக்க வேண்டும் இது எனக்கு வேண்டாம் வேறு கதை ரெடி பண்ண சொல்லிவிட்டார். ஆனால் இப்பொழுது இந்த படத்தில் அமீர் இருப்பது 100 சதவீதம் உறுதி ஆனால் சூர்யா நடித்தால் நடிக்கட்டும் இல்லையென்றால் அவரது கம்பெனி நாயகன் தனுஷ் நடிக்க வைக்கவும் வெற்றிமாறன் ஒரு யோசனையில் இருந்து வருகிறாராம்.

தனுஷ் கண்டிப்பாக நடிக்க ஒப்புக் கொள்வார். காரணம் இந்த படத்தின் கதை அப்படிப்பட்ட ஒரு கதை எந்த கதாநாயகனும் கிடைக்கும் வாய்ப்பை தவிர்க்க மாட்டார்கள். இந்த கதைக்கு சூர்யாவை தவிர தனுஷ் அல்லது சிம்பு பொருத்தமாக இருப்பார் ஆனால் சிம்பு வேறு படத்தில் நடிக்க இருப்பதால் இந்த படத்தில் நடிப்பது நடிக்க இயலாது. அதனால் தனுஷ் ஒப்புக் கொண்டால் மட்டுமே அடுத்த கட்ட முடிவை எடுக்க முடியும்.

சூர்யாவை பொருத்தவரை இந்த கதை முக்கியமான கதையாக இருந்தாலும் அவருக்கு இந்த படத்தை வைத்து தான் வளர வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதை போல் வெற்றிமாறனுக்கும் அதே நிலைதான் இப்படியே பேச்சு வார்த்தை தொடர்ந்து கொண்டே போனால். அஜித் படத்தை வெற்றிமாறன் தொடங்கி விட்டு இந்த படத்தை கைவிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் ஈகோவால் தமிழ் சினிமாவுக்கு வரவேண்டிய நல்ல படம் வராமல் போவது தமிழ் சினிமாவிற்கும் அவரது ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமே.

Also Read: தலைவலியாக மாறிப்போன வாடிவாசல்.. இறங்கி வந்த சூர்யாவுக்கு ட்விஸ்ட் வைத்த வெற்றி மாறன்

Trending News