வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மீண்டும் உருவாகும் வெற்றிமாறனின் கேங்ஸ்டர் படம்.. தனுஷை மிஞ்சும் நடிப்பு அரக்கன்

வித்தியாசமான கதைக்களத்தின் மூலம் தொடர்ந்து வெற்றிப்படங்கள் மட்டுமே கொடுத்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். தற்போது சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை எடுத்து வருகிறார். இதைத்தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் தனுஷுக்கு பல ஹிட் படங்களை வெற்றிமாறன் கொடுத்துள்ளார். அதாவது பொல்லாதவன் தொடங்கி ஆடுகளம், வடசென்ன, அசுரன் என தொடர் வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இந்தக் கூட்டணியில் வடசென்னை படம் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது.

முதலில் வடசென்னை படத்தில் சிம்பு தான் நடிப்பதாக இருந்தது. அதன் பின்பு ஒரு சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது. அதன்பின்பு தனுஷ் இப்படத்தில் கதாநாயகனாக இருந்தாலும் கதை அமீரின் ராஜன் கதாபாத்திரத்தை சுற்றி தான் நகர்கிறது. வடசென்னை மக்களின் வாழ்வை அப்படியே பிரதிபலிதிருந்தார் வெற்றிமாறன்.

இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் தற்போது வெற்றிமாறனின் அடுத்த படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது வெற்றிமாறன் பகத் பாசிலை கதாநாயகனாக வைத்து கேங்ஸ்டர் படம் ஒன்றை எடுக்க உள்ளார்.

இந்தப் படமும் வடசென்னையில் இரண்டு தரப்பு இடையே நடக்கும் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. ஒருவேளை இந்த படம் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது மலையாள நடிகர் பகத் பாசில் தமிழ் படங்களின் கலக்கி வருகிறார்.

கமலஹாசனின் விக்ரம் படத்தில் அவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. மேலும் தெலுங்கில் புஷ்பா படத்தின் மூலம் அறிமுகமான பகத் பாசில் அங்கேயும் தனக்கான ரசிகர்களை பெற்றுள்ளார். இந்நிலையில் தமிழில் வெற்றிமாறன் படத்தில் கதாநாயகனாக பகத் பாசில் களம் காண உள்ளார் .

Trending News