நடிகர்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல் கேரக்டர் இருக்கும். அந்த வகையில் அவர்கள் பாணியில் நடிக்கும்போது தன்னையறியாமலேயே அந்த மாதிரியான நடிப்பு வெளிப்பட்டுவிடும்.
கமல் படம் என்றால் முத்தத்திற்கு பஞ்சம் இருக்காது. விஜயகாந்த் படம் என்றால் இடுப்பை கிள்ளும் சீன் கட்டாயமாக இருக்கும். அதேபோல் தற்போது விஜய்க்கு உதட்டை கிள்ளும் ஒரு மேனரிசம், அவரிடம் இருந்து வருகிறது. அந்த வகையில் அவர் கிள்ளிய ஹீரோயின் உதடுகள்.
போக்கிரி: பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படம் போக்கிரி. அந்த படத்தில் மாம்பழம் பாட்டில் அசினின் உதட்டை கிள்ளி எடுப்பார் விஜய்.

வேட்டைக்காரன்: இந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் ரொமான்ஸ் செய்கிறேன் என்ற பெயரில் அனுஷ்காவின் உதட்டை கிள்ளி ரொமான்ஸில் பட்டையைக் கிளப்பி இருப்பார்.
புலி: ஹன்சிகா, சுருதிஹாசன் ஸ்ரீதேவி நடித்த படம் புலி. இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஹன்சிகாவின் உதட்டிலும் கை வைக்கத் தவறவில்லை விஜய்.
மெர்சல்: அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்த மெர்சல் படத்தில் இடம்பெற்ற மாச்சோ பாடலில் நடிகை காஜல் அகர்வாலின் உதட்டிலும் நடிகர் விஜய் விளையாடி இருப்பார்.
சர்க்கார் படம்: கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடித்த சர்க்கார் படத்திலும் ஒரு பாடல் காட்சியில் உதட்டை கிள்ளி எடுத்திருப்பார்.
பீஸ்ட்: அரபிக் குத்து பாடல் மட்டும் என்ன விதிவிலக்கா. இந்தப் பாட்டிலும் பூஜா ஹெக்டேவின் உதட்டை விஜய் கிள்ளிவதற்கு மறக்கவில்லை.
