Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

விடுதலை-2 மட்டும் இல்ல.. 3 இருக்கு.. இணையத்தில் கசிந்த தகவலால் அதிர்ச்சியில் வெற்றிமாறன்

விடுதலை-2 மட்டும் இல்ல.. 3 இருக்கு.. இணையத்தில் கசிந்த தகவலால் அதிர்ச்சியில் வெற்றிமாறன்

கம்மியான படங்கள் எடுத்திருந்தாலும், இதுவரை தரமான படங்களை மட்டுமே கொடுத்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். கடைசியாக 2023ஆம் ஆண்டு விடுதலை திரைப்படத்தை இயக்கினார். நடிகர் சூரி, முழுமையாக ஒரு ஆக்சன் ஹீரோவாக மாறியதற்கு முதன்மையான காரணம் இந்த “விடுதலை” திரைப்படமே. […]

கம்மியான படங்கள் எடுத்திருந்தாலும், இதுவரை தரமான படங்களை மட்டுமே கொடுத்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். கடைசியாக 2023ஆம் ஆண்டு விடுதலை திரைப்படத்தை இயக்கினார். நடிகர் சூரி, முழுமையாக ஒரு ஆக்சன் ஹீரோவாக மாறியதற்கு முதன்மையான காரணம் இந்த “விடுதலை” திரைப்படமே. அந்தப் படத்துக்குப் பிறகு வெற்றிமாறன், வெளியான சில நாட்களிலேயே ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகளை தொடங்கினார்.

ஆனால், சுமார் ஒரு வருடம் கடந்த பிறகும் அந்தப் படத்தின் குறித்த முக்கியமான தகவல்கள் வெளிவரவில்லை. இந்நிலையில் அண்மையில் “விடுதலை” படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது டப்பிங் பணிகளும் நடந்து வருவதாக தகவல் வந்தது.

2 இல்ல, மூணு..

இந்த நிலையில் படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி இருக்கிறார்கள் ரசிகர்கள். குறிப்பாக விஜய் சேதுபதி மஞ்சு வாரியர் எப்படி நடித்துள்ளார்கள்.. அவர்கள் கதை என்ன என்பதை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படி பட்ட சூழ்நிலையில், ஒரு புதிய தகவல் தீயாக பரவி வருகிறது.

விடுதலை 2-ஆம் பாகமே இன்னும் முடிந்த பாடில்லை. அதுக்குள் 3 ஆம் பாகமும் உண்டு என்ற தகவல் பரவியது. இதை தொடர்ந்து நெட்டிசன்ஸ் பலர், “இந்த தகவல் வெற்றிமாறனுக்கு தெரியுமா?” என்று கேட்டு நக்கல் செய்து வந்தனர். ஆனால் உண்மையில் 3 ஆம் பாகம் வரும்போல தான் தெரிகிறது.

ஏன் என்றால் இரண்டாம் பாகம் மிகவும் பெரியதாக இருக்கிறது. நீளத்தை குறைக்க முடியவில்லை என்று படக்குழுவினர் புலம்பி வருகின்றனர். மேலும், படப்பிடிப்பு இன்னும் முடியவே இல்லை. இதனால் கண்டிப்பாக 3 ஆம் பாகம் வரும் என்று தான் கூறப்படுகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.