செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

பழைய உசுரை வாழ்த்திய விக்னேஷ் சிவன்.. போங்க பங்காளி வெட்கமா இருக்கு

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை எத்தனையோ காதல் ஜோடிகளை பார்த்திருக்கிறோம். அதில் மிக ஹாட்டான காதல் ஜோடி என்றால் அது விக்னேஷ் சிவன்- நயன்தாராவாகத்தான் இருக்கும். எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வது, கை கோர்த்துக் கொண்டே நடப்பது, என்று பார்க்கும் நமக்கே பொறாமை கொள்ளும் அளவிற்கு காதலை பகிர்ந்து கொள்கின்றனர்.

வெறும் காதல் மட்டும் என்று இல்லாமல் இருவரும் இணைந்து படங்கள் தயாரித்து அதிலும் வெற்றி கண்டு வருகின்றனர். இருந்தாலும் இதுவரை அவர்களின் திருமணம் குறித்து வாயே திறக்கவில்லை. இந்த நிலையில், விக்னேஷ் சிவனுக்கு முன்பு நயன்தாராவிற்கு சிம்புவோடு ஏற்பட்ட காதலும் அதன் பின் ஏற்பட்ட முறிவும் அனைவரும் அறிந்த ஒன்றே. அது விக்னேஷ் சிவனுக்கும் நன்றாக தெரியும். அது குறித்து எப்போது அவரிடம் கேட்டாலும் அது நயன்தாராவின் கடந்த காலம் என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நழுவி விடுவார்.

vignesh shivan simbu
vignesh shivan simbu

இப்படி இருக்கையில் விக்னேஷ் சிவன் அதையெல்லாம் மனதில் பெரிதாக எடுத்துக் கொள்ளாதது போலதான் தொடர்ந்து நடந்து கொள்கிறார். தொடர்ந்து சிம்புவின் ஒவ்வொரு கொண்டாட்டத்தின் போதும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அதை நிரூபித்தும் வருகிறார். சிம்புவின் பிறந்தநாளான இன்றும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார்.

simbu
simbu

அதில் சிம்புவை வைத்து தான் இயக்கிய போடா போடி படத்தின் பாடலையும் இணைத்து “Happy birthday to you Simbu sir” என்றும் தனது வாழ்த்துக்களை கூறி இருக்கிறார். இதற்கு முன்னர் சிம்புவின் திரைவாழக்கையில் 35 ஆண்டுகளை நிறைவு செய்து அதனை கொண்டாடிய போதும் அதற்கு விக்கி வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

என்னதான் ஊருல ஆயிரம் பேர் ஆயிரம் பேசுனாலும், மனசுல எதையும் வச்சுக்காம திறந்த புத்தகமா இருக்கிங்களே பாஸ்..? என நெட்டிசன்கள் மீம்களை இணையத்தில் அள்ளி வீசி வருகின்றனர்.

Trending News