செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கதாநாயகி கிடைக்காமல் தினமும் ஒரு நடிகை அறிமுகம்.. AK62 படத்தில் இணையும் அடுத்த ஜோடி

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு படம் ரிலீசாகி ஒரு வாரமாக வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது இவரின் அடுத்த படமான AK62க்கு சில அப்டேட்டுகள் விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருந்தார். ஏற்கனவே இந்தப் படத்திற்கான இரண்டு கதாநாயகிகளை கதைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து விட்டனர்.

ஆனால் இப்பொழுது இதில் சில மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது, ஒரு கதாநாயகியாக ஐஸ்வர்யா ராயை கன்பார்ம் பண்ணிவிட்டனர். மற்றொரு நடிகையை தேர்ந்தெடுக்கும் பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முதலில் நயன்தாரா, திரிஷா அடுத்து காஜல் அகர்வால் என நடிகையின் லிஸ்ட் பெரிய அளவில் போய்க்கொண்டே இருக்கிறது.

Also read: இரண்டு கதாநாயகிகளுடன் ஜோடி போடும் அஜித்.. விக்னேஷ் சிவன் வைக்க போகும் டபுள் ட்ரீட்.!

பின்னர் இந்த கதைக்கான கதாநாயகியை அலைந்து திரிந்து தேடிப்பிடித்து வேற வழியே இல்லாம கீர்த்தி சுரேஷை தேர்வு செய்து உள்ளனர். இப்பொழுது இந்த நடிகையையும் மாற்றப்பட்டுள்ளது. இப்படி ஒரு கதாநாயகிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வரும் விக்னேஷ் அதற்கு ஏற்ற மாதிரி தான் கதையும் ஒரு வெயிட்டாக வைத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது அந்த லிஸ்டில் சாய்பல்லவி பெயரும் அடிப்பட்டு வருகிறதாம். நடிப்புக்கு சில காலங்கள் முழுக்கு போட்ட சாய் பல்லவி மீண்டும் அஜித்துடன் இணைகிறார் என்ற செய்தி ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also read: மீண்டும் இணையும் மெகா கூட்டணி.. அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகும் அஜித்

ஆனால் சில தகவல்கள் வெளியானது மூலம் இவர் இப்படி சல்லடை போட்டு தேடும் மற்றொரு நடிகைக்கு வில்லி கதாபாத்திரமாக இருக்கலாம் என்று வெளியாகி உள்ளது. பொதுவாக முன்னணி நடிகைகள் ஜோடியாக மட்டுமே நடிப்பதற்கு முன் வருவார்கள். அதனால் தான் என்னவோ இந்த கதைக்கு ஏற்ற எந்த ஜோடியும் சரியாக அமையாமல் இருக்கிறது.

மேலும் இந்த படத்தை ஜனவரி மாதமே தொடங்குவதாக இருந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகிகளை தேர்வு செய்ய முடியாமல் ஒரு மாதமாக தள்ளிப் போயிருக்கிறது. இப்படி ஒரு டாப் நடிகரின் படத்திற்கு நடிகை கிடைக்காமல் இருப்பது இதுதான் முதல் முறையாகும். இது ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கப் போவதாக விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார்.

Also read: துணிவு படம் பார்க்க சென்று உயிரிழந்த ரசிகர்.. அஜித் செய்யாததை செய்து காட்டிய வாரிசு நடிகர்

Trending News