வேற மாதிரி, அதாரு பண்ணிய விக்னேஷ் சிவன்.. அதுக்காகவே அடிக்கடி போன் செய்யும் அஜீத்

ajith-vignesh
ajith-vignesh

அஜித்தின் வலிமை திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து அஜித் மீண்டும் வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் இணைகிறார். இப்படம் வலிமை திரைப்படத்தைப் போல் நீண்ட நாள் இழுக்காமல் கூடிய விரைவில் ரசிகர்களின் பார்வைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் வலிமை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை ரொம்பவும் கவர்ந்துள்ளது அதிலும் நாங்க வேற மாதிரி மற்றும் அம்மா பாடல் இரண்டும் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சொல்லப்போனால் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் அஜித்துக்கும் இந்த அம்மா பாடல் ரொம்ப பிடிக்குமாம். இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் அவருக்கு அவருடைய அம்மா ஞாபகம் தான் வருகிறதாம். இப்படி அனைவரையும் பீல் பண்ண வைத்த இந்த பாடலை எழுதியவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இவரை ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக, நடிகராக நம் அனைவருக்கும் தெரிந்தாலும் பல பாடல்களையும் இவர் எழுதியிருக்கிறார். அந்த வகையில் இவர் பல நடிகர்களுக்கும் பாடல்களை எழுதியிருக்கிறார். அதில் நடிகர் அஜித்துக்கு என்னை அறிந்தால், வலிமை போன்ற இரு படங்களுக்கு பாடல்கள் எழுதி இருக்கிறார்.

அஜித், த்ரிஷா, அருண் விஜய் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் “அதாரு அதாரு” என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். அப்படம் வெளிவந்த சமயத்தில் இந்தப் பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இந்தப் பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார்.

மேலும் அவர் அஜித்துக்காக எழுதிய இந்த மூன்று பாடல்களும் ரசிகர்களின் பேவரைட் பாடலாக இருக்கிறது. தனக்கு இப்படி ஒரு சிறப்பான பாடலை எழுதி கொடுத்ததற்காக அஜித், விக்னேஷ் சிவனுக்கு அடிக்கடி போன் போட்டு பாராட்டிப் பேசிக் கொண்டிருக்கிறாராம்.

Advertisement Amazon Prime Banner