வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரகசியத்தை கட்டி காப்பாற்றும் படக்குழுவினர்.. வாரிசு பட ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரசியம்

நெல்சன் திலீப் குமர் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தை தொடர்ந்து, தளபதி விஜய் தனது 66 படமான வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்குகிறார். முழுக்க முழுக்க குடும்ப சென்டிமென்ட் படமாக உருவாகும் வாரிசு திரைப்படத்தின் அப்டேட் இணையத்தில் வெளியாகி அதை தளபதி ரசிகர்கள் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கின்றனர்.

இன்னிலையில் விஜய்யின் 48-வது பிறந்தநாள் ஜூன் 22ம் தேதி தளபதி ரசிகர்களால் தாறுமாறாக கொண்டாடப்பட்டது. விஜய் பிறந்தநாள் அன்று ஓய்வு கொடுக்காமல் ஷூட்டிங்கை வைத்துள்ளனர் வாரிசு படக்குழுவினர். இந்த படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளங்களை நடத்திக்கொண்டிருக்கிறது.

இதற்காக படக்குழுவினர் விஜய் பிறந்தநாள் அன்று பிரம்மாண்ட கேக்குகளை வெட்டி அசத்தி விட்டனராம். வாரிசு படத்தில் விஜய் குடும்பமாக நடிக்கும் அத்தனை பிரபலங்களும் ரசிகர்களும் இந்த பிறந்த நாளுக்கு வந்து விஜய்யுடன் கொண்டாடி அசத்தி விட்டனராம்.

அதுமட்டுமின்றி இந்த பிறந்த நாளில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் அனைத்தையும் ரகசியமாக வைத்திருக்கின்றனர். வாரிசு படம் வெளி வந்த பின்னர்தான் வெளியிடுவார்களாம். இந்த போட்டோக்களை இப்பொழுதே வெளியிட்டால் படத்தில் அனைவரது கெட்டப்பும் தெரிந்துவிடும் என்பதால் வெளியிடாமல் உள்ளனர்.

அதுமட்டுமின்றி போடப்பட்ட செட்டுகள் அனைத்தையும் எளிதாக வெளியில் கசிந்து விடும் என்று இந்த போட்டோக்களை ரகசியமாக பாதுகாத்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்க பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதுகிறார்.

தில் ராஜு தயாரிக்கும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தை தொடர்ந்து தற்போது சென்னையில் விறுவிறுப்பாக முழுவீச்சுடன் நடந்து வருகிறது. படத்தை முழுமூச்சில் எடுத்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறது சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.

Trending News