Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

இதுவரை விஜய் அப்படி செய்ததே கிடையாது.. அதிர்ச்சி அடைய செய்த லோகேஷ் கனகராஜ்

இதுவரை விஜய் அப்படி செய்ததே கிடையாது.. அதிர்ச்சி அடைய செய்த லோகேஷ் கனகராஜ்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜயின் 65 வது படமான பீஸ்ட் படம் ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கயுள்ளார். விஜய் 66 படம் […]

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜயின் 65 வது படமான பீஸ்ட் படம் ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கயுள்ளார்.

விஜய் 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். விஜய் 66 படம் தீபாவளி அல்லது பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்யின் 67 வது படத்தை யார் இயக்குவது என பல இயக்குனர்களின் பெயர் இணையத்தில் உலாவியது.

இந்நிலையில் விஜயின் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் விஜய் 67 படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் இதே கூட்டணியில் அடுத்த படம் உருவாக உள்ளது.

தற்போது லோகேஷ் கனகராஜ் கமலின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. கமலின் விக்ரம் படத்தை தொடர்ந்து விஜய் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

விஜயின் பீஸ்ட் படத்திலேயே ஹீரோயின் பூஜா ஹெக்டே தனக்கு இப்படத்தில் ஸ்கோப் இல்லை என கூறினார். தற்போது விஜயின் 67 படத்தில் ஹீரோயினே இல்லையாம். அதுமட்டுமல்லாமல் பாடல், ரொமான்ஸ் என எதுவுமே இல்லையாம். இப்படம் முழுவதும் ஆக்ஷன் த்ரில்லர் படமாக எடுக்கப்பட உள்ளது. இதுவரை விஜய் அப்படி  நடித்ததே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்திலும் பாடல்கள், ஹீரோயின் இல்லாத நிலையில் விஜய்யின் 67வது படத்திலும் இதே கடைப்பிடிக்கிறார் இயக்குனர். விஜய்யின் 66 வது படம் துள்ளாத மனமும் துள்ளும், பூவே உனக்காக போன்ற படங்களைப் போல் காதல் கதையாக எடுக்க உள்ள நிலையில் அதற்கு நேரெதிராக விஜய்யின் 67வது படம் ஆக்ஷன் படமாக எடுக்கப்பட உள்ளது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.