திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

உலகநாயகனுக்காக எழுதிய கதையில் தளபதி விஜய்.. இயக்குனர் மிஷ்கினின் புது அவதாரம்

மிஸ்கின் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஸ்டைலுடன் திரைப்படத்தை இயக்கி வெற்றி கொடுப்பவர். இவரது திரைப்படங்கள் பல விமர்சிக்கப்பட்டாலும் இவருக்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட மிஷ்கினிடம், விஜய் வருத்தப்பட்டு ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

மிஸ்கினின் இயக்கத்தில், 2006ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார், இத்திரைப்படத்தில் நடிகர் நரேன்,பாவனா  உள்ளிட்டோர் நடித்து அசத்தியிருப்பார்கள். இத்திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் ஹிட்டடித்த நிலையில், நடிகர் விஜய் படத்தை தியேட்டரில் வந்து மிஷ்கினுடன் அமர்ந்து பார்த்துள்ளார்.

Also read: அர்ச்சனாவுக்கு டஃப் கொடுக்க வரும் விஜய் டிவியின் அராத்து.. இந்த சீசனில் நிச்சயம் சம்பவம் இருக்கு

அப்போது  நடிகர் விஜய் ஏன் என்னிடம் வந்து இத்திரைப்படத்தின் கதை சொல்லவில்லை, நீங்கள் கதை சொல்லியிருந்தால் நான் நடித்திருப்பேன்  என்று மிஷ்கினிடம் வருத்தத்துடன் தெரிவித்தாராம். அதற்கு பதிலளித்த மிஸ்கின் நான் உங்களிடம் வந்து கதையை சொல்லி இருந்தால், உங்கள் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் கதையில் பல மாற்றங்களை செய்ய சொல்வார் அது எனக்கு செட்டாகாது என சொன்னாராம்.

இதனிடையே இயக்குனர் மிஸ்கின் அடுத்தபடியாக உலக நாயகன் கமலஹாசனின் நடிப்பில் புத்தர் என்ற திரைப்படத்தை இயக்கலாம் என்று முடிவெடுத்து அதற்கான பணிகளில் இறங்கினாராம். ஆனால் அப்போதுதான் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் தசாவதாரம் திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்து கொண்டிருந்த வேளையில் புத்தர் படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனதாம்.

Also read: தளபதி 68 அப்டேட்: 300 கோடியில் பான் இந்தியா மூவி.. இயக்குனரை உறுதி செய்த விஜய்

தற்போது கமலஹாசன்  பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வந்தாலும், அவரது வயதும் அவரது நடிப்புக்கு முற்றுப்புள்ளியாக ஒரு கட்டத்தில் அமையும். இந்நிலையில் நடிகர் விஜய்யின் நடிப்பில் புத்தர் திரைப்படத்தின் கதையை புதுப்பித்து தான் இயக்க உள்ளதாக இயக்குனர் மிஸ்கின் கூறியுள்ளார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் அடுத்ததாக பிசாசு 2 திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இத்திரைப்படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனிடையே இத்திரைப்படத்தின்  ரிலீசுக்கு பின் நடிகர் விஜய்யிடம் சென்று மிஸ்கின் புத்தர் படத்தின் கதையை  கூற வாய்ப்புள்ளதாகவும்  கோலிவுட் வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read: சூர்யாவின் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த விஜய்.. நிராகரிக்க இப்படி ஒரு காரணமா?

Trending News