திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்யுடன் கூட்டணி போடும் சூப்பர் ஸ்டார்.. தளபதி-67 சம்பவம் பெருசா இருக்கும் போல லோகேஷ் ப்ரோ

விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம், வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கலன்று திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வாரிசு திரைப்படத்தின் அப்டேட்டை விட விஜய் அடுத்ததாக நடிக்கப்போகும் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் தற்போது இணையத்தில் காத்துக்கொண்டிருக்கின்றன. தளபதி 67 திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பூஜை வேலைகள் கூடிய விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read: விஜய்யின் சந்தோஷத்துக்கு ஆப்பு வைத்த வம்சி.. மருத்துவமனையிலிருந்து வந்தவுடனேயே செய்த வேலை

ஏற்கனவே தளபதி 67 திரைப்படத்தில் 5 வில்லன்கள் உள்ளனர் என்றும் அதில் முக்கியமாக அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோரின் பெயர் இடம்பெற்றது. இதனிடையே தற்போது தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து பல திரைப்படங்களில் வெற்றி கொடுத்து வரும் மூன்றெழுத்து நாயகன் தளபதி67 திரைப்படத்தில் இணைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜயின் திரைபடங்களில் தற்போது பல மல்டி ஸ்டார் நடிகர்கள் நடித்து வரும் நிலையில்,வெந்து தணிந்தது காடு, மாநாடு உள்ளிட்ட திரைப்படங்களில் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த நடிகர் சிம்பு, தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also read: பயமுறுத்திய சினிமா இண்டஸ்ட்ரி.. விஜய்யை பின்பற்றும் அஜித்

நடிகர் சிம்பு தற்போது பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மல்டி ஸ்டார் திரைப்படமான செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் தனது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தினார். இதனிடையே தளபதி 67 திரைப்படத்திலும் சிம்பு வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உலகநாயகன் கமலஹாசன், வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடையில் பேசியபோது, சிம்புவை தன் படத்தில் நடிக்க வைப்பேன் என உறுதியளித்தார். அப்போது வேட்டையாடு விளையாடு 2 திரைப்படத்தில் சிம்பு வில்லனாக நடிப்பார் என தகவல் வெளியானது. இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது

Also read: சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் செய்த தளபதி விஜய்.. வறுத்தெடுத்த பிரபல தயாரிப்பாளர்

Trending News