Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

விஜய், அஜித் நடிக்க இருந்த படம்.. மார்க்கெட் இல்லாத நடிகர் நடித்து வெற்றி கண்ட படமாச்சே!

விஜய், அஜித் நடிக்க இருந்த படம்.. மார்க்கெட் இல்லாத நடிகர் நடித்து வெற்றி கண்ட படமாச்சே!

ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் வளரும் நடிகர்களாக அஜித் மற்றும் விஜய் இருந்தபோது அவர்கள் இருவரும் ஒன்றாக நடிக்க இருந்த படங்கள் ஏராளமாக உண்டு. இருப்பினும் இவர்கள் முதன் முதலாக இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படம் ரசிகர்களிடம் […]

ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் வளரும் நடிகர்களாக அஜித் மற்றும் விஜய் இருந்தபோது அவர்கள் இருவரும் ஒன்றாக நடிக்க இருந்த படங்கள் ஏராளமாக உண்டு. இருப்பினும் இவர்கள் முதன் முதலாக இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படம் ரசிகர்களிடம் வசூல் ரீதியாக தோல்வியை சந்திப்பது.

அதன் பிறகு தல அஜித் மற்றும் தளபதி விஜய் இணைந்து நடிக்க இருந்த நேருக்குநேர் படத்தில் பாதியிலேயே அஜித் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு அஜீத்துக்கு பதில் சூர்யா அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வாகி விஜய்யுடன் சூர்யா கூட்டணியில் நேருக்கு நேர் திரைப்படம் வெளியானது.

இதில் சூர்யா இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனது அற்புதமான நடிப்பை எதார்த்தமாக வெளிக்காட்டி ரசிகர்களின் மத்தியில் கவனம் பெற்றார். மேலும் இந்தப் படத்திற்கு பிறகுதான் சூர்யா அசால்டாக சூப்பர் ஹிட் படங்களுக்கான வாய்ப்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று பூ ,பிச்சைக்காரன் போன்ற எதார்த்தமான படங்களை இயக்கிய சசி, அஜித் மற்றும் விஜய் நடித்த இருந்த படம் ரோஜா கூட்டம் இந்த படத்திலும் நேருக்கு நேர் படம் போன்றே கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டதால், ரோஜா கூட்டம் படத்தில் ஸ்ரீகாந்த்தும் ஆகாஷும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பெயரை வாங்கிக் கொண்டனர்.

இதன் பிறகு அஜித் மற்றும் விஜய் இணைய வாய்ப்பு இல்லாத துரதிஸ்ட நிலைமை இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும் இவர்கள் இருவரும் தற்போது எப்போது சேர்ந்து நடிக்கப் போகிறார்கள் என விஜயும் அஜித்தும் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்த மாதிரியான கதையை வெங்கட் பிரபு அல்லது சங்கர் ஆகியோரால் மட்டுமே முடியும்.

ஏற்ற கதை இருந்தால் நிச்சயம் தளபதி விஜயுடன் சேர்ந்து நடிக்கத் தயார் என தல அஜித் ஏற்கனவே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தால் அவர்களுக்கான கதையை உருவாக்குவதில் இயக்குனர்கள் முயற்சிக்கின்றனர். அத்துடன் தயாரிப்பாளர்கள் சிலர் தல தளபதியின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.